இந்த ஸ்மார்ட்போன் 19,999 ரூபாய் என்ற விலையிலிருந்து துவங்குகிறது.
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன்
இந்தியாவில் நோக்கிய 8.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 6GB RAM என வெளியான அனைத்து வகை ஸ்மார்ட்போன்களும் விலை குறைப்பை பெற்றுள்ளது. இந்த விலைக்குறைப்பில் இதன் அடிப்படை மாடலான 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன், அதன் விலையிலிருந்து 7,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக மாடலான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலையும் அதே அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் நோக்கியா ஆன்லைன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மேலும், அமேசானிலும் இதே விலையில் விற்பனையாகவுள்ளது
நோக்கியா 8.1: விலை!
முன்னதாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதன்முதலில் 26,999 ரூபாய்க்கு அறிமுகமானது. ஆனால் இதன் தற்போதைய விலை 19,999 ரூபாய். 29,999 ரூபாய்க்கு அறிமுகமான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகையான நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை 22,999 ரூபாயக உள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இதே அளவில் தான் உள்ளது. 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 19,250 ரூபாய் எனவும், 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 23,850 ரூபாய் எனவும் விற்பனையில் உள்ளது.
| ஸ்மார்ட்போன் | புது விலை | பழைய விலை | விலை வித்தியாசம் |
|---|---|---|---|
| நோக்கியா 8.1 (4GB + 64GB) | 19,999 ரூபாய் | 26,999 ரூபாய் | 7,000 ரூபாய் |
| நோக்கியா 8.1 (6GB + 128GB) | 22,999 ரூபாய் | 29,999 ரூபாய் | 7,000 ரூபாய் |
நோக்கியா 8.1: சிறப்பம்சங்கள்!
6.18-இன்ச் FHD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் திரை 1080x2244 பிக்சல்களையும், 18.7:9 என்ற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. அதே நேரம் செல்பி எடுக்க 20 மெகபிக்சல் கேமரா உதவும்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரியையும், 18W அதிவேக சார்ஜரையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date