Android 9 Pie-யுடன் Nokia 8.1 டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம்
Nokia 8.1 தனது ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியுள்ளதாக நோக்கியா பிராண்ட் உரிமதாரர் HMD Global புதன்கிழமை அறிவித்தது. புதிய வளர்ச்சியுடன், நோக்கியா 8.1 சமீபத்திய ஆண்ட்ராய்டு புதுப்பிப்பைப் பெற்ற முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது. கூகுள் கடந்த மாதம் தனது பிக்சல் தொலைபேசிகளுக்காக முறையாக வெளியிட்ட புதுப்பிப்பைப் பெற்ற, Qualcomm's Snapdragon 710 SoC-யால் இயங்கும் முதல் தொலைபேசியாகவும் இது வருகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்ட்ராய்டு 10 வேறு பல நோக்கியா தொலைபேசிகளுக்கு விரிவுபடுத்த Finnish நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Nokia 8.1 க்கான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பு இந்தியாவில் over-the-air (OTA) தொகுப்பு மூலம் வெளிவருகிறது. மேம்படுத்தப்பட்ட சைகை வழிசெலுத்தல் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் Android 10 புதுப்பிப்பு கொண்டு வருகிறது. HMD Global வழங்கிய அதிகாரப்பூர்வ சேஞ்ச்லாக் ஸ்மார்ட் பதில் மற்றும் ஃபோகஸ் பயன்முறையையும் உள்ளடக்கியது. இவை இரண்டும் கடந்த மாதம் பிக்சல் தொலைபேசிகளில் அறிமுகமானது.
"Nokia 8.1 ஆனது அண்ட்ராய்டு 10-ஐப் பெறும் Qualcomm Snapdragon 710-ஐ இயக்கம், முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பதால், நாங்கள் முதல் முன்மாதிரியை அமைத்துக்கொள்கிறோம். மேலும், அண்ட்ராய்டு 10 ஐ மற்ற முக்கிய சிப்செட்களில் முதன்முதலில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று HMD Global, தலைமை தயாரிப்பு அதிகாரி Juho Sarvikas ஒரு அறிக்கையில் கூறினார். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு 10 இயங்கும் எங்கள் முழு portfolio-வையும் இங்கே காணலாம்! "
ஆகஸ்ட் மாதத்தில், HMD Global தனது அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு 10 roadmap வெளியிட்டது. இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் நோக்கியா 7.1, நோக்கியா 8.1, மற்றும் நோக்கியா 9 PureView ஆகியவற்றுக்கு சமீபத்திய ஆண்ட்ராய்டு operating system கொண்டுவர நிறுவனம் தயாராக உள்ளது என்பதை roadmap காட்டியது. அதே நேரத்தில் நோக்கியா 6.1, நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஆகியவை 2020 முதல் காலாண்டில் புதுப்பிப்பைப் பெற அமைக்கப்பட்டுள்ளன. நோக்கியா 2.1, நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் போன்ற மாடல்களும், அவை 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதுப்பிப்பைப் பெற உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்