Nokia 7 Plus இப்போது அதன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதாக நோக்கியா மொபைல் பிராண்ட் உரிமதாரரான HMD குளோபல் அறிவித்துள்ளது. இது சமீபத்திய காலங்களில் அப்டேட்டை பெறும் இரண்டாவது ஸ்மார்ட்போனான Nokia 7 Plus-ஐ உருவாக்குகிறது. HMD குளோபல் சமீபத்தில் Nokia 6.1 Plus-க்கு ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டது. Nokia 7 Plus, 2018-ஆம் ஆண்டில் Android Oreo உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அடுத்த சில மாதங்களில் Android Pie-க்கு அப்டேட்டைப் பெற்றது. Nokia 7 Plus என்பது கூகுளின் Android One programme-ன் ஒரு பகுதியாகும். இது உத்தரவாத மென்பொருள் அப்டேட்டுகல் மற்றும் optimised, stock Android interface-ஐ உறுதிப்படுத்துகிறது.
நோக்கியா மொபைல் நிறுவனம், ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பை Nokia 7 Plus-க்கு வெளியிடுகிறது என்று ட்வீட் செய்துள்ளது. இந்த மென்பொருள் அப்டேட் V4.10C சுமார் 1.4GB அளவு மற்றும் டிசம்பர் பாதுகாப்பு பேட்சையும் அதனுடன் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட், Dark mode, Smart Reply அதேபோன்று Gesture Navigation ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. பயனர்கள் தங்கள் பிராந்தியத்தில் update notification-ஐ பெற வேண்டும், மாற்றாக, அவர்கள் அப்டேட்டுகளை மேனுவலாக சரிபார்க்க Settings > About Phone > System Update-க்கு செல்லலாம்.
Nokia 7 Plus இந்தியாவில் ஏப்ரல் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 660 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Corning Gorilla Glass 5 உடன் 6-inch full-HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Nokia 7 Plus-ன் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் wide-angle கேமரா மற்றும் Zeiss optics உடன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆகியவற்றைக் கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.
நினைவுகூர, Nokia 7 Plus, 3,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதை நாங்கள் மதிப்பாய்வு செய்தபோது மிகச் சிறப்பாக செயல்பட்டது. Nokia 7 Plus Android One Programme-ன் ஒரு பகுதியாக இருப்பதால், இரண்டு உத்தரவாத ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் மற்றும் மூன்று ஆண்டு பாதுகாப்பு அப்டேட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Nokia 7 Plus பெறும் இந்த Android 10 அப்டேட், கடைசி பெரிய அப்டேட்டாக இருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்