Nokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது!

Nokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது!

Photo Credit: Techmesto

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தினாலான Nokia 7.2 ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்களில் கசிந்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • Nokia 7.2 IFA 2019-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • முந்தைய கசிவுகளை இந்த நேரடி புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன
  • இது மூன்று கேமராக்களுடன் வட்ட கேமரா தொகுப்பை கொண்டுள்ளது
விளம்பரம்

சமீபத்தில் வெளியான இரண்டு கசிவுகளுக்கு பிறகு நோக்கியா 7.2 அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கசிவுகள் இதுவரை ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மற்றும் சாதனத்தை இயக்கும் ப்ராசஸர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக HMD குளோபல், IFA 2019 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது, மேலும் அந்த நிகழ்வில் நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் IFA 2019 நிகழ்வில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்மெஸ்டோ (Techmesto) வெளியிட்டுள்ள புதிய கசிவு, நோக்கியா 7.2-வின் நேரடி புகைப்படங்கள் முன்பு கசிந்த வடிவமைப்பை உறுதிப்படுத்துவதாகக் காட்டுகிறது. மற்றொரு ரஷ்ய நிறுவனம் நோக்கியா 7.2 ஐஸ் ப்ளூ (Ice Blue), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), மற்றும் சார்கோல் பிளாக் (Charcoal Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து சமீபத்தில் கசிந்தது ரஷ்யாவிற்கான TA-1196 மாடல் எண், நோக்கியா 7.2 இரண்டு சிம் வசதி கொண்டிருக்கும் எனக் குறிப்பிடுகிறது. முந்தைய கசிவில், நோக்கியா பவர் யூசர் (NokiaPowerUser), TA-1178 மாடல் எண் நோக்கியா 7.2-வின் ஒற்றை சிம் வசதி வகையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அந்த குறிப்பிட்ட வகை 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேரடி புகைப்படம் ஃபாரஸ்ட் கிரீன் வண்ணத்தினாலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனை காட்டுகிறது. இது முன்பக்க புகைப்படம் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் FHD+ திரையுடன் HDR10 வசதி கொண்டு அறிமுகமாகும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்புறத்தில், இது ஒரு மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இந்த கேமராக்கள் வட்ட கேமரா தொகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில், ஃபிங்கர் பிர்ன்ட் சென்சார் பின்புறத்தில் இடம் பெற்றுள்ளது.

பின்பறத்தில் உள்ள கேமராக்களில் ஒன்று 48 மெகாபிக்சல் சென்சாராக இருக்கக்கூடும், மற்ற சென்சார்களின் விவரங்கள் தற்போது தெரியவில்லை. நோக்கியா 7.2 Geekbench தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அன்டஹ் தளம், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 எஸ் ஓ சி அல்லது ஸ்னாப்டிராகன் 710 எஸ் ஓ சி மூலமாக இயக்கப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த தொலைபேசி 3500mAh பேட்டரி அளவைக் கொண்டு செய்யப்படுவதாகவும், குவால்காமின் விரைவு சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான வசதியை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

HMD குளோபல் செப்டம்பர் 5 ஆம் தேதி IFA 2019 நிகழ்வை நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த நிகழ்வில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, HMD Global
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »