Nokia 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள் (ரூ .19,800) என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகமாகியுள்ளது.
Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமானது. நோக்கியா பிராண்ட் உரிமதாரரான HMD குளோபல் வியாழக்கிழமை பேர்லினில் நடந்த IFA தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தியது. Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகியவை நிறுவனத்தின் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பட்டியலில் ஒரு பகுதியாக இருக்கும். கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு, 3,500mAh பேட்டரி மற்றும் 3 பின்புற கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, HMD குளோபல் சில அம்ச தொலைபேசிகளையும், நோக்கியா பவர் இயர்பட்களையும் வெளியிட்டுள்ளது.
Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஸ்மார்ட்போன்கள் வளைந்த விளிம்புகளுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்களைக் கொண்டுள்ளன. கூடுதலாக, வடிவமைப்பு முன்னணியில், HMD குளோபல் ஒரு வட்ட கேமரா தொகுதி அமைப்பை தேர்வுசெய்துள்ளது. இந்த அமைப்பு மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கேமரா தொகுதிக்குக் கீழே, பின்புறத்தில் பிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்ட் 10 தயாராக உள்ளது என்றும் மூன்று வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு OS மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்றும் HMD குளோபல் தெரிவித்துள்ளது.
Nokia 6.2 ஐரோப்பாவில் 199 யூரோக்கள் (தோராயமாக 15,800 ரூபாய்) ஆரம்ப விலையை கொண்டு அக்டோபரில் விற்பனைக்கு வரும் என்று HMD குளோபல் தெரிவித்துள்ளது. இது கருப்பு (Ceramic Black) மற்றும் பனி (Ice) வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. Nokia 7.2 ஸ்மார்ட்போன் 249 யூரோக்கள்(தோராயமாக ரூ .19,800) என்ற ஆரம்ப விலையுடன் இந்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cyan Green), கரி (Charcoal) மற்றும் பனி (Ice) வண்ணங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை, விற்பனை குறித்து எந்த வார்த்தையும் இல்லை, இருப்பினும் HMD குளோபலின் முந்தைய தட பதிவுகளைப் பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. HDR10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் full-HD+ திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Nokia 6.2 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88x75.11x8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. HDR10 வசதி, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வு ஆகிய அம்சங்களுடன் 6.3-இன்ச் full-HD+ திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Nokia 7.2 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 159.88x75.11x8.25mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 180 கிராம் எடை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்