நோக்கிய 6.1 விலையில் வெளியாகும் நோக்கியா 6.2!
இந்த ஆண்டு நடைபெற்ற உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியல் ஹெம்எம்டி குளோபல் நிறுவனம் சார்பாக நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி அறிமுகம் செய்யப்பட்ட இந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்கப்படுகறிது.
ஆனால் இந்த போனை பற்றிய அதிகார்வபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த புதிய தயாரிப்பு நோக்கியா 6.1 போனின் விலையையே பெறும் எனக் கூறப்படுகிறது.
நோக்கியா 6.1 விலை (இந்தியா)
இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் வெளியான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.10,599க்கும், நோக்கியா 6 தயாரிப்பின் 3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி ரூ.16,999க்கும், 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு இந்தியாவில் விற்பனையானது.
நோக்கியா 6.1 அமைப்புக்கள் (கசிந்துள்ள தகவல்கள்)
இன்னும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் தகவல்கள் முழுமையாக வெளியாகத நிலையில் பல தகவல்கள் தொடர்ந்து கசிந்துகொண்டு இருக்கின்றன. மேலும் இந்த போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே டிசைன் கொண்டது என்றும் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் இந்த போன் ஸ்னாப்டிராகன் 632 SoC மற்றும் 4ஜிபி/6ஜிபி ரேம் வகைகளை கொண்டிருக்கலாம். கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன், 5.5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 630 SoC கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமரா சென்சாரும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 3,000mAh பேட்டரியுடன் இந்த போன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்