Nokia 6.1 Plus தங்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளதாக HMD குளோபல் அறிவித்துள்ளது. இந்த அப்டேட் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மேலும், dark mode, gesture navigation மற்றும் smart reply போன்ற அம்சங்களை இயக்குகிறது. கடந்த ஆண்டு, Nokia 7.1, Nokia 6.1 மற்றும் Nokia 9 PureView போன்ற போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறுவதைக் கண்டோம். இப்போது, Nokia 6.1 Plus-ம் அதைப் பெறுகிறது. இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட், கூடுதல் செயலிக் கட்டுப்பாடுகள், புதிய UI மற்றும் பல விஷயங்களைக் கொண்டுவருகிறது.
நோக்கியா மொபைல் பிராண்ட் உரிமதாரரான HMD குளோபல், Nokia 6.1 Plus பயனர்களுக்கான ஆண்ட்ராய்டு 10-ன் வெளியீட்டை உறுதிப்படுத்த ட்விட்டருக்கு அழைத்துச் சென்றது. சமீபத்திய மென்பொருள் அப்டேட் over-the-air (OTA)-ஐ வெளியிடும். மேலும், இது பயனர்களுக்கு தொகுப்பாக வர வேண்டும். நீங்கள் இப்போது அப்டேட்டைப் பெறவில்லை எனில், Settings > About Phone > System updates > Check for update-ஐ சரிபார்க்கவும். அப்டேட்டின் வருகையை உறுதிப்படுத்தும் பயனர்கள் ட்விட்டரில் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, இந்த அப்டேடின் பதிப்பு எண் v4.10C மற்றும் அப்டேட்டின் அளவு 1302.7MB-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டுவருகிறது என்பதையும் ஸ்கிரீன் ஷாட்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆண்ட்ராய்டு 10-க்கான ரோல்அவுட் ரோட்மாப்பை வெளிப்படுத்திய HMD குளோபல் இந்த மாதத்திலேயே Nokia 6.1, Nokia 7 Plus போன்ற பிற போன்கலுக்கும் அப்டேட்டை வெளியிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் 2020 முதல் காலாண்டில் Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 மற்றும் Nokia 4.2 ஆகியவற்றுக்கும் வெளியிடப்படும். அதன் பிறகு, இது Nokia 1 Plus, Nokia 5.1 Plus மற்றும் Nokia 8 Sirocco-விலும் வெளியிடப்படும்.
ரோட்மாப்பில் Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 மற்றும் Nokia 1 ஆகியவை அடங்கும் - இந்த நான்கு போன்களும் ஆண்ட்ராய்டு 10-ஐ Q2 2020-ல் பெறும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்