நோக்கியா 5310 ஃபீச்சர் போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நோக்கியா 5310 இந்த ஆண்டு மார்ச் முதல் வெளிவரத் தொடங்கும்
நோக்கியா 5310 ஃபீச்சர் போனை நோக்கியா மொபைல் பிராண்ட் உரிமதாரர் எச்எம்டி குளோபல் வியாழக்கிழமை ஆன்லைன் நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. அசல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மூலம் ஈர்க்கப்பட்ட 2ஜி நோக்கியா 5310 போன், நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான நோக்கியா 8.3 5ஜி உடன் வெளியிடப்பட்டது. நோக்கியா சமீபத்திய ஃபீச்சர் போனை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக நிலைநிறுத்துகிறது, குறிப்பாக "பயணத்தின்போது தங்கள் இசையை கேட்க விரும்புவோருக்கு". இது உலகளாவிய வெளியீடாக இருந்ததால், நோக்கியா 5310 எப்போது இந்தியாவுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Nokia 2007-ல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் வெளியிட்ட நேரத்தில், இந்த போன் கருப்பு / சிவப்பு மற்றும் கருப்பு / நீல கலர் ஆப்ஷன்களில் திரையின் இடது பக்கத்திற்கு அருகில் மூன்று பொத்தான்களுடன் வந்தது. இருப்பினும், புதிய நோக்கியா 5310, வெள்ளை / சிவப்பு மற்றும் கருப்பு / சிவப்பு கலர் ஆப்ஷன்களில் திரைக்கு அருகிலுள்ள பொத்தான்களைக் நீக்குகிறது.
Nokia 5310 விலை யூரோ 39 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,110) மற்றும் இந்த மார்ச் முதல் ரோல் அவுட் தொடங்கும் என்று நிறுவனம் அறிமுகப்படுத்தியபோது அறிவித்தது.
புதிய நோக்கியா 5310 பல மேம்பாடுகளுடன் வருகிறது, இருப்பினும், HMD Global இந்த போன் குறிப்பாக அதன் முன்னோடிகளைப் போலவே "இசை ஆர்வலர்களுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. 2ஜி ஃபீச்சர் கொண்ட போன் 2.4 அங்குல கியூவிஜிஏ டிஸ்பிளேவுடன் இரட்டை முன் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள் மற்றும் விசைப்பலகையுடன் வருகிறது. இந்த போன் மினி சிம் ஆதரிக்கும் இரட்டை சிம் மற்றும் ஒற்றை சிம் ஆப்ஷன்களிலும் வருகிறது.
ஹூட்டின் கீழ், புதிய நோக்கியா 5310 மீடியாடெக் MT6260A SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 8MB ரேம் கொண்டுள்ளது. இந்த போன் நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருளில் இயங்குகிறது மற்றும் 16MB-யின் இண்டஎனல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.
பேட்டரியைப் பொறுத்தவரை, 1200 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது, இது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் அலகுகளில் 7.5 மணி நேரம் வரை பேச்சு நேரத்தை உறுதிப்படுத்துகிறது. இரட்டை சிம் அலகுக்கு 22 நாட்கள் மற்றும் ஒற்றை சிம் அலகுக்கு 30 நாட்கள் காத்திருப்பு (standby) நேரத்தை வழங்குவதாகவும் ஃபீச்சர் போன் கூறுகிறது.
நோக்கியா 5310 பின்புறத்தில் ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த போன் 123.7 x 52.4 x 13.1 மிமீ அளவு மற்றும் 88.2 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series