எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் புதிய அறிமுகமான நோக்கியா 3.1 ஆண்ட்ராய்ட் ஒன் போனை இந்தியாவை அறிமுகப்படுத்தியுள்ளது
எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் புதிய அறிமுகமான நோக்கியா 3.1 ஆண்ட்ராய்ட் ஒன் போனை இந்தியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்த போன் 18:9 எச்டி+ பேனல் மற்றும் 2990 எம்ஏஎச் பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இந்த போன் 10,499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 2ஜிபி ரேம் / 16 ஜிபி உள் நினைவகத்திறனைக் கொண்டுள்ளது. இந்த போன் 5.2 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் சிப்செட் வசதியும், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. இதில், 13எம்பி பின்புற கேமராவும், 8எம்பி செஃல்பி கேமராவும், எல்இடி பிளாஷ் அமைப்பும் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிஇ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's 18-Inch Foldable iPad Said to Be Delayed; Could Launch in 2029 With Hefty Price Tag