எந்த போன்களை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை
Photo Credit: Twitter/ Juho Sarvikas
துபாயில் டிசம்.5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் நோக்கியா மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியாவின் உரிமையாளரான ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதிய போன்களின் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஹெச்.எம்.டி குளோபலின் தலைமை அதிகாரி, ஜூகோ சர்விகாஸ் துபாயில் டிசம்பர் 5 ஆம் தேதி தங்கள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதை #ExpectMore என்ற தலைப்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
எந்த போன்களை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், யுகத்தின் அடிப்படையில் ஹெச்.எம்.டி குளோபல் நோக்கியா 2.1 பிளஸ், நோக்கியா 8.1 மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9னை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்விகாஸ் தனது டிவிட்டர் பதிவின் மூலம் நிகழ்ச்சி நடக்க இருப்பதை உறுதி படுத்தியுள்ளார். #ExpectMore என்ற தலைப்பில் டீசர் இமேஜ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். துபாயில் டிசம்பர் 5ல் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் எந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சர்விகாஸ் பதிவிட்ட இமேஜின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போனில் இரண்டில் மட்டும் டிஸ்பிளே நாட்ச் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு முந்தைய தகவலின் படி, நோக்கியா 8.1ல் நாட்ச் இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7.1 பிளஸ் உலகமுழுவதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு போன்களில் எது சீனாவில் வெளியான நோக்கியா எக்ஸ் 7ன் குளோபல் வேரியண்ட் என தெரியவில்லை.
டீசர் இமேஜில் காட்டப்பட்டிருக்கும் நாட்ச் இல்லாத ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்படும் நோக்கியா 9 ஆகும். இதற்கு முந்தைய தகவல்கள் பெண்டா கேமிராவினைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனில் டிஸ்பிளே நாட்ச் இருக்காது என்பதை பரிந்துரைத்தது.
சமீபத்திய தகவலின் படி, நோக்கியா 9ல் ஆண்ட்ராய்டு 9 பையில் இயங்கும். 6.01 இன்ச் டிஸ்பிளேயுடன் அதன் பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குவால்கம் ஸ்நாப் டிராகன் 845 SoC இருக்கும் என்று வதந்திகள் பரவி வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். ஒன்று அல்லது இரண்டு சிம்களை பயன்படுத்துவதுற்கான ஆப்ஷன்களுடன் 4,150 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Mark OTT Release Date: When and Where to Watch Sudeep Sanjeev’s Action Thriller Online?