Nokia 2.3 கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் அறிமுகமானது, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது, இதன் ஒரே வேரியண்டின் ரூ.8,199 ஆகும். நோக்கியா தனது நுழைவு நிலை ஆண்ட்ராய்டு போனின் விலையை, இந்தியாவில் ரூ.1,000 குறைத்துள்ளது. தற்போது இந்த போனின் விலை ரூ.7,199 ஆகும்.
Nokia 2.3-யின் விலைக் குறைப்பு இப்போது நாட்டில் நேரலையில் உள்ளது, மேலும் இது அதிகாரப்பூர்வ Nokia online store-ல் இருந்து ரூ.7,199-க்கு வாங்காலாம். இந்த போன் சற்றே குறைந்த விலையில், Amazon-ல் இருந்து ரூ.7,165-க்கு கிடைக்கிறது. Nokia 2.3,Cyan Green, Sand மற்றும் Charcoal கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
டூயல்-சிம் (நானோ) Nokia 2.3, Android Pie-ல் இயங்குகிறது. இது விரைவில் Android 10 அப்டேட்டைப் பெறும். இது waterdrop notch மற்றும் 19:9 aspect ratio உடன் 6.2-inch HD+ (720x1520 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2GB RAM உடன் இணைக்கப்பட்டு quad-core MediaTek Helio A22 SoC-யால் இயக்கப்படுகிறது.
Nokia's நுழைவு நிலை போன், டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 2-மெகாபிக்சல் depth சென்சார் உதவியோடு, f/2.2 aperture உடன் 13-மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு f/2.4 aperture உடன் 5-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் 32GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (400GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
இந்த நோக்கியா போன் பிரத்யேக Google Assistant பொத்தானுடன் வருகிறது. மேலும், 3D nano texture உடன் polymer body-ஐக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். Nokia 2.3, 5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்