NOKIA 109 (2018) பிள்ஃப்கார்டில் ரூபாய் 1,309 விற்பனை செய்யப்படுகிறுது.
ஹெச்.எம்.டி குலோபல் டிரேகன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நோக்கியா நிறுவனம் கடந்த மாதம் தனது நோக்கியா 8.1 வகை போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மற்றும் ரிடேயில் கடைகளிலும் விற்பனைக்கு தயாராகும் நோக்கியா 106 (2018) அந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்துள்ளது.
ஒரு தடவை சார்ஜ் செய்தால் 15 மணிநேரம் வரை பவர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலையை ரூபாய் 1,299 என நிர்ணயத்துள்ள நிலையில், சாம்பல் நிறத்தில் மட்டுமே இந்த போன் வெளியாகும் என தெரிகிறது.
ஆன்லைன் முன்பதிவு செய்பவர்களுக்கு சுமார் 21 நாட்களுக்குள் போன்கள் சென்றடையும் நோக்கியா 106 (2018) பிள்ஃப்கார்டு மற்றும் அமேசான் விற்பனையில் 1,309 மற்றும் 1,479 ரூபாய்கு விற்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் கிர்டிட் கார்டு உபயேகப்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 % தள்ளுபடியிம், அமேசான் நிறுவனத்தில் ஹெ.டி.எப்.சி தவணை முறையில் வாங்குபவர்களுக்கு 5 % சதவிகிதம் தள்ளுபடியும், ஹெச்.டி.எப்.சி டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 % தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படுகிறது.
டூயல் சிம் வசதி கொண்ட இந்த நோக்கியா 106 (2018) வகை போன் 1.8 இஞ்சு உயரமும் 160*120 பிக்சல் கேமரா வசதியை கொண்டது. இதில் 4 எம்.பி ரேம் உள்ள நிலையில், 4 எம்.பி நினைவகத்தையும் கொண்டது. எஃப்.எம் மற்றும் எல்.இ.டி ப்ளாஷ் லைட் உடன் வெளிவரவுள்ளது.
மேலும் 2000 போன் நம்பர்களையும் 500 மெசேஜ்களையும் இதில் சேமித்துக்கொள்ள முடியும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்