Photo Credit: Motorola
மோட்டோரோலா ரேஸ்ர்+ பாரிஸ் ஹில்டன் பதிப்பு பாரிஸ் பிங்க் ஷேட் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷில் வருகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Motorola Razr+ செல்போனின் Paris Hilton Edition பற்றி தான்.
Motorola Razr+ செல்போனின் Paris Hilton Edition செவ்வாயன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. "தட்ஸ் ஹாட்" என்ற சொற்றொடர் வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பாரிஸ் பிங்க் நிறத்திலும், லெதர் பூச்சு, லெதர் உறையுடன் தனித்துவமான வடிவமைப்பில் வருகிறது. இந்த செல்போனில் தனித்துவமான ரிங்டோன்கள், எச்சரிக்கைகள் மற்றும் வால்பேப்பர்கள் உள்ளன. இது அமெரிக்காவிற்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளிலும் கிடைக்கும். இந்தியாவில் மோட்டோரோலா ரேசர்+ 2024 போன்ற செல்போன்கள் அதே அம்சத்தை பெறுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 SoC சிப்செட், 4-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 4,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
Motorola Razr+ செல்போனின் Paris Hilton Edition விலை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி தோராயமாக ரூ. 1.04,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 13 முதல் அமெரிக்காவில் வரையறுக்கப்பட்ட அளவுகளில் Motorola.com இல் பிரத்தியேகமாக வாங்கக் கிடைக்கும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த போன் பாரிஸ் பிங்க் நிறத்தில் பின்புற பேனலில் பாரிஸ் ஹில்டனின் கையெழுத்து மற்றும் கீலில் "தட்ஸ் ஹாட்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான பேக்கேஜிங்கில் வருகிறது. "பாரிஸால் ரிங்டோன்கள், எச்சரிக்கைகள் மற்றும் வால்பேப்பர்கள்" கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸ்ர்+ இன் பாரிஸ் ஹில்டன் பதிப்பு, பிங்க் ஐகான் வண்ண விருப்பத்தில் வீகன் லெதர் கேஸ், பிங்க் ஸ்பார்க்கிள் மற்றும் பிங்க் வீகன் லெதர் ஸ்ட்ராப் விருப்பங்கள் உள்ளிட்ட பிரத்யேக ஆபரணங்களுடன் வருகிறது.
மோட்டோரோலா ரேஸர்+ பாரிஸ் ஹில்டன் பதிப்பு6.9-இன்ச் முழு-HD+ கொண்ட LTPO pOLED டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் 4-இன்ச் LTPO pOLED கவர் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஹலோ UI உடன் வருகிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS)சப்போர்ட் உடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா உள்ளது. பின்புறத்தில் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கேமரா மற்றும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரியை 45W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்