பெரும் எதிர்பார்ப்பு மற்றும் தொடர்ச்சியான டீஸர்கள் வெளியான பல மாதங்களுக்கு பிறகு, மோட்டோரோலா ரஸ்ர் (2019) இறுதியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய புதிய மோட்டோரோலா போனில் நெகிழ்வான OLED டிஸ்பிளே இடம்பெறுகிறது, இது முழுமையாக பாதியாக மடிகிறது. ஸ்மார்ட்போனில் அறிவிப்புகள் மற்றும் விரைவான செல்ஃபிக்களுக்கான இரண்டாம் நிலை டிஸ்பிளே உள்ளது.
இந்தியாவில் Motorola Razr (2019)-ன் ஒரே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.1,24,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் Noir Black கலர் ஆப்ஷனில் வருகிறது. மேலும், இது பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது, இது ஏப்ரல் 2 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
மோட்டோரோலா ரேஸ்ர் (2019)-ன் வெளியீட்டு சலுகைகளில் சிட்டி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.10,000 கேஷ்பேக் அடங்கும், டபுள் டேட்டா மற்றும் வேலிடிட்டியைத் தவிர்த்து, ரிலையன்ஸ் ஜியோ, ரூ.4,999 ரீசார்ஜில், 1.4TB டேட்டா மற்றும் 2 ஆண்டு வேலிடிட்டியை வழங்குகிறது. ஸ்மார்ட்போன் வாங்கிய 30 நாட்களுக்குள், மோட்டோகேர் விபத்து பாதிப்பு பாதுகாப்பு ப்ளான் தள்ளுபடி விலையிலும் கிடைக்கும். ஒரு முறை திரை மாற்றுவதற்கு ரூ.7,999 ஆகும்.
மோட்டோரோலா ரேஸ்ர் (2019) கடந்த ஆண்டு நவம்பரில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 1,499.99 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,11,300)-க்கு விற்பனைக்கு வந்தது.
ஆண்ட்ராய்டு 9 பை-யில் இயங்கும் மோட்டோரோலா ரேஸ்ர் (2019), 6.2 அங்குல நெகிழ்வான OLED HD + (876x2142 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இருப்பினும், போனின் மேல் கவரில் இரண்டாம் நிலை 2.7-இன்ச் (600x800 பிக்சல்கள்) Quick View panel உள்ளது, இது பயனர்களை செல்பி எடுக்க, அறிவிப்புகளைக் காண மற்றும் இசை பின்னணியைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது - இவை அனைத்தும் போனை திறக்காமல். 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 710SoC உள்ளது.
மோட்டோரோலா ரேஸ்ர் (2019) ஒரு ஒற்றை முதன்மை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது f/1.7 லென்ஸூடன் 16 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது. இந்த போன் மடிந்த நிலையில் இருக்கும்போது செல்பி எடுக்க முதன்மை கேமரா அமைப்பைப் பயன்படுத்தலாம். போனில் ஒரு தனி செல்பி கேமராவும் உள்ளது, இது பிரதான டிஸ்பிளேவுக்கு மேலே உள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் பட சென்சாரைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸ்ர் (2019) மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாத 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். மடிக்கக்கூடிய போனின் சின்னில் ஆப்டிகல் கைரேகை சென்சார் உள்ளது.
மோட்டோரோலா 2,510 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ப்போன் விரிவடைந்த நிலையில் 72x172x6.9 மிமீ மற்றும் மடிந்த நிலையில் 72x94x14 மிமீ அளவைக் கொண்டுள்ளது. தவிர, இதன் எடை 205 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்