Motorola Razr 2019 Foldable Phone இன்று வெளியாகுமா....?

Motorola Razr 2019 மடிக்கக்கூடிய போன் EUR 1,500 (சுமார் ரூ. 1,18,500) விலைக் குறியீட்டுடன் வரும்.

Motorola Razr 2019 Foldable Phone இன்று வெளியாகுமா....?

Photo Credit: Twitter/ Evan Blass

Motorola Razr 2019 வழக்கமான பிளிப் போன் போல இருக்கும்

ஹைலைட்ஸ்
  • Motorola Razr 2019 வெளியீடு லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) நடைபெறும்
  • மடிக்கக்கூடிய போன் கவர் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • இந்த போன் Qualcomm Snapdragon 710-ஆல் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது
விளம்பரம்

Motorola Razr, அதன் பிரீமியம் தோற்றமுடைய ஃபிளிப் தொலைபேசிகளுக்கு பிரபலமாக உள்ளது. இது Motorola Razr,2019 உடன் மீண்டும் வர வாய்ப்புள்ளது. லெனோவாவுக்கு சொந்தமான நிறுவனம் கலிபோர்னியாவின் (California) லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) ஒரு நிகழ்வை நடத்துகிறது. அங்கு எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Motorola Razr 2019 கடந்த காலத்தில் பல முறை கசிந்துள்ளது. அதன் கூறப்படும் சில ரெண்டர்கள் அதன் ஃபிளிப் போன்ற வடிவமைப்பைக் காண்பித்தன. அதில் முன் பேனலில் இரண்டாம் நிலை காட்சி உள்ளது. Motorola Razr 2019-ஐ மடிந்தால், முந்தைய ரேஸ்ர்-சீரிஸ் தொலைபேசிகளைப் போலவே ஒரு சாதாரண ஃபிளிப் போன் (flip phone) போல இருக்கும்.

கடந்த மாதம், Motorola லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) இன்றைய நிகழ்வுக்கு ஒரு அழைப்பை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது "மற்றதைப் போலல்லாமல் ஒரு அசல்" என்று கூறி Motorola Razr 2019-ஐ அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. "You're going to flip" என முந்தைய ரேஸ்ர் மாடல்களையும் நினைவுபடுத்தியது.

மோட்டோரோலாவின் ஊடக அழைப்பிதழில், புதிய ரேஸ்ர் (Razr) ஸ்மார்ட்போனின் மடிக்கக்கூடிய வடிவமைப்பை பரிந்துரைக்கும் GIF அடங்கும்.

பிப்ரவரியில், குளோபல் தயாரிப்பு டான் டெரியின் (Global Product Dan Dery) மோட்டோரோலா வி.பி (Motorola VP), மடிக்கக்கூடிய போனின் திட்டங்களை Motorola Razr  2019 என்ற பெயரைக் குறிப்பிடாமல் உறுதிப்படுத்தியது. "நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே மடிப்புகளில் (foldables) வேலை செய்யத் தொடங்கினோம்" என்று டெரி (Dery) பேட்டியில் கூறியிருந்தார்.

மோட்டோரோலா (Motorola) தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை உருவாக்கும் போது சாம்சங் மற்றும் ஹவாய் ஏற்றுக்கொண்டவற்றிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும் என்றும், இரண்டு முறை மடிக்கும் ஒற்றை நெகிழ்வான டிஸ்பிளேவை வைக்கும் என்றும் நிர்வாகி எடுத்துரைத்தார். ஸ்மார்ட்போன் dual-hinge வடிவமைப்போடு வரும் என்றும் கூறப்படுகிறது.

Motorola Razr 2019 முன்பக்கத்தில் ஒரு சிறிய திரையுடன் வரும். இது அறிவிப்பு எச்சரிக்கைகளைக் காண்பிக்கும் என்று சமீபத்திய ரெண்டர்களில் சில பரிந்துரைத்தன. செல்ஃபி எடுக்கப் பயன்படுத்தக்கூடிய கேமரா சென்சாருடன் இந்த திரை வரும்.

ஒருமுறை திறந்தவுடன், Motorola Razr 2019 நடுவில் இருந்து செங்குத்தாக திறக்கப்படும் (vertically unfolding). கைபேசியில் பின்புறத்தில் fingerprint சென்சார் வைக்கப்படலாம்.


Motorola Razr 2019-ன் விவரக்குறிப்புகள் (வதந்தியானவை):

Motorola Razr 2019, 876x2142 pixels resolution உடன் 6.2-inch டிஸ்பிளேவைக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த போன் 2,730mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும், 6GB RAM வரையும், 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடனும் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 710 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இந்த போன் EUR 1,500 (சுமார் ரூ. 1,18,500) விலைக் குறியீட்டுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது.

Motorola லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) அதன் வெளியீட்டு நிகழ்வின் நேரத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்புகளைப் படிக்க கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருக்க வேண்டும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  2. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  3. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  4. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
  5. விரலில் ஒரு Smartwatch! Diesel Ultrahuman Ring வந்துருச்சு! ஹார்ட் ரேட், தூக்கம்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ணலாம்
  6. புது Samsung A-சீரிஸ் வருது! A07 5G இந்த மாசம் லான்ச்? A57-ல் பெரிய அப்கிரேட்! Samsung ஃபேன்ஸ் ரெடியா
  7. புதுசா 2 பிளான்! Disney+ Hotstar, ZEE5-ஐ விட கம்மி விலையில் Tata Play Binge-ல் புது OTT கன்டென்ட்
  8. புது Vivo போன் வாங்க ரெடியா? V70, T5x 5G-க்கு BIS சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! லான்ச் தேதி எப்போ
  9. புது Poco ஃபிளாக்ஷிப் வருது! Poco X8 Pro-க்கு BIS சான்றிதழ்! ₹30,000 ரேஞ்சில் இந்த போனை எதிர்பார்க்கலாமா
  10. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »