கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான ’மோட்டோரோலா ஒன் பவர்’ ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ஜியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, போகோ f1 போன்களுக்கு இணையாக லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா தனது புதிய மாடலான மோட்டோரோலா ஒன் பவரை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 5,000 mAh பேட்டரி மற்றும் நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. கடந்த செப்.24 அன்றே, பிளிப்கார்ட்டில் இந்த மொபைலுக்கான முன்பதிவு தொடங்கியிருந்த நிலையில், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலா ஒன் பவர் விலை,
இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பவர் விலையானது ரூ.15,999 ஆகும். 4ஜிபி ரேம்/ 64ஜிபி இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இன்று பிற்பகல் 12 மணி முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வந்தது.
மோட்டோரோலா ஒன் பவர் விவரக் குறிப்புகள்,
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படுகிறது. 6.2 இன்ச் (2246x1080) பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்எம் பிராசஸர், அட்ரினோ 509 ஜிபியூ கொண்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் பவர் கேமராவை பொருத்தவரையில், பின்பக்கம் இரண்டு கேமரா கொண்டுள்ளது. 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 12 எம்.பி. செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது.
64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் பவரை, மைக்ரோ SDகார்ட் துணையுடன் 256ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். பின்பக்க கைரேகை சென்சார், யூஎஸ்பி - சி டைப் சார்ஜிங், 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. 15w டர்போ சார்ஜிங் கொண்டுள்ளதால், 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை மொபைலை பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்