Motorola ஒரு புதிய போனை pop-up selfie கேமராவுடன் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
Snapdragon 675 SoC-யால் Motorola One Hyper இயக்கப்படும்
Motorola ஒரு புதிய போனை pop-up selfie கேமராவுடன் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இதனை Motorola One Hyper என்று அழைக்கப்படும். இந்த மாத தொடக்கத்தில், தொலைபேசியின் கூறப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் hands-on படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. இது வரவிருக்கும் தொலைபேசியைப் பற்றிய முதல் விரிவான தோற்றத்தை எங்களுக்குத் தருகிறது.
Motorola One Hyper விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)
Motorola One Hyper, notch இல்லாமல் 6.39-inch full-HD+ (1080 x 2340 pixels) IPS டிஸ்பிளே மற்றும் full-screen வடிவமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது. டிஸ்பிளேவின் மேலே f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவை pop-up கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. விரிவாக்கத்திற்கு microSD card வழியாக 4GB RAM மற்றும் 128GB விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட Snapdragon 675 processor மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The Motorola One Hyper-ல் f/2.2 aperture உடன் 8-megapixel depth-sensing கேமரா உதவியோடு, பின்புறத்தில் f/1.8 lens உடன் 64-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. 30fps-ல் 4K வீடியோக்களையும், 60fps வரை full-HD வீடியோக்களையும், 120fps-ல் slo-mo வீடியோக்களையும், 1080p resolution மற்றும் 720p resolution-ல் 240fps பதிவு செய்ய இந்த போன் திறன் கொண்டதாகும்.
தொலைபேசியின் கேமரா செயலியில் குறைந்த ஒளி புகைப்படத்திற்காக பிரத்யேக Night Vision mode-ஐ வழங்கும். charging மற்றும் file transfer-க்கு Motorola One Hyper-ல் 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகிய அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,600 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் fast-charging-கிற்கு எந்த அறிவிப்பும் இல்லை. மென்பொருளைப் பொருத்தவரை, Motorola One சீரிஸின் உடன்பிறப்புகளைப் போலவே Motorola One Hyper-வை Android 10-ல் இயங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ubisoft Delays Earnings Release on Due Date, Requests Trading of Its Shares Be Halted
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force