மீண்டுமொரு 48 மெகாபிக்சல் போன்: இந்த 'மோட்டோ Z4'-ன் விலை என்ன?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 31 மே 2019 09:08 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.
  • இது 25 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
  • இதன் விற்பனை அமெரிக்காவில் ஜூன் 6-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது.

மோட்டோ 360 மொடுடன் உள்ள மோட்டோ Z4.

வியாழக்கிழமையன்று, தனது புதிய ஸ்மார்ட்போனான, மோட்டோ Z4-ஐ அறிமுகம் செய்துள்ளது. தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது, மோடோ நிறுவனம். மற்ற Z- தொடர்கள் பொன்றில்லாமல், இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், இதற்கு முந்தைய ஸ்மார்ட்போன்களில் இடம் பெற்றிருந்த 'மோடோ மோட்' இடம்பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின், விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!

மோட்டோ Z4: விலை!

499 டாலர்கள் (34,900 ரூபாய்) துவக்க விலையில் விற்பனையாகவுள்ள இந்த மோட்டோ Z4, 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது.  அமெரிக்காவில் வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்பொனின் முன்பதிவு, இப்போதே நடைபெறுகிறது. கனடாவில் பின்னர் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோட்டோ Z4, சாம்பல் (Flash Grey) மற்றும் வெள்ளை (Frost White) வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.

மோட்டோ Z4: சிறப்பம்சங்கள்!

அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படும் மோட்டோ Z4 ஸ்மார்டபோனின் அமெரிக்க வெர்சனில், ஒரு நானோ சிம் வசதி மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், இதன் இந்திய மட்டும் சீன வெர்சன்கள் இரண்டு நானோ சிம் வசதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன், 6.40-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 19.5:9 என்ற அளவிலான திரை விகிதத்தை கொண்டுள்ளது. 

4GB RAM கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

ஒரே ஒரு பின்புற கேமரா மட்டுமே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 25 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

3,600mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு, 15W டர்போ சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.இது டைப்-C சார்ஜ் போர்ட் கொண்டுள்ளது. 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டு வந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

158x75x7.35mm என்ற அளவிலான இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போன், 165 கிராம் எடை கொண்டுள்ளது. 128GB சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 2TB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Moto Z4, Moto Z4 Price, Moto Z4 Specifications, Motorola Moto Z4, Motorola
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.