Photo Credit: Amazon
வதந்தியான Moto G8 Power அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னர் அதன் விவரக்குறிப்புகளை அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த காலங்களில் கீக்பெஞ்ச் மற்றும் சான்றிதழ் தளங்களில் காணப்பட்டது. ஆனால், நிறுவனத்தின் முடிவில் இருந்து அறிமுகம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளும் இல்லை. இருப்பினும், அமேசான் முன்னோக்கி சென்று Moto G8 Power-ஐ கருப்பு மற்றும் நீல ஆப்ஷன்களில் பட்டியலிட்டுள்ளது. ஆனால், போன் இ-காமர்ஸ் தளத்தில் ‘தற்போது கிடைக்கவில்லை'. இந்த பட்டியல் விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தாது. ஆனால், அதன் வடிவமைப்பைப் பற்றி எங்களுக்கு ஒரு நல்ல தோற்றத்தை அளிக்கிறது.
Moto G8 Power-ன் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அதன் வடிவமைப்பு அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது. பின்புற கைரேகை சென்சார் உடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை இந்த போனில் காணலாம். பின்புற கேமரா அமைப்பு செங்குத்தாக சீரமைக்கப்பட்டு போனின் மேல் இடது மூலையில் வைக்கப்படுகிறது. Moto G8 Power-ல் hole-punch டிஸ்பிளே உள்ளது. மேலும், பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Moto G8 Power, 6.4-இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே இடம்பெறும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு Snapdragon 665 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இது 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்க பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது - மற்ற இரண்டு சென்சார்களின் தெளிவுதிறன்கள் விரிவாக இல்லை. Moto G8 Power இரட்டை சிம் இடங்களை ஆதரிக்கவும், ஆண்ட்ராய்டு 10 மென்பொருளில் இயங்கவும், 5,000mAh பேட்டரியை பேக் செய்யவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறுகிறது. மேலும், இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஆதரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது. Smoke Black மற்றும் Capri Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கக்கூடிய போனை அமேசான் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியல்களை முதலில் டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட்ட் (Roland Quandt) கண்டுபிடித்தார்.
கடந்த கசிவுகள் இந்த புதிய அமேசான் பட்டியலை உறுதிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் பின்புறத்தில் உள்ள மற்ற இரண்டு கேமராக்களும் இரண்டு 8 மெகாபிக்சல் சென்சார்களாக இருக்கும் என்றும் இது அறிவுறுத்துகிறது. செல்பி ஸ்னாப்பர் 25 மெகாபிக்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இது dual-band Wi-Fi ஆதரவை வழங்க முனைகிறது. Moto G8 Power எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்