Photo Credit: Gadgets 360
லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது சமீபத்திய ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜூலை 10ல் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வோம் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இது பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா ஸ்டோரில் ஆன்லைனில் கிடைக்கும் என்பதை மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.
Get ready to elevate your style and give off main character energy vibes with the #MotoG85 5G.
Launching on 10th July @Flipkart, https://t.co/azcEfy1Wlo and all leading retail stores.#AllEyesOnYou pic.twitter.com/nr2YhCEcS3— Motorola India (@motorolaindia) July 3, 2024
Moto G85 5G செல்போன் ஆலிவ் கிரீன், கோபால்ட் ப்ளூ மற்றும் அர்பன் கிரே வண்ணங்களில் வருகிறது. Moto G85 சமீபத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே அம்சங்களுடன் இந்தியாவிலும் அறிமுகமாகிறது. 175 கிராம் எடையும் 7.59 மிமீ தடிமனையும் கொண்டுள்ளது. 1080x2400 பிக்சல் கொண்ட 6.67-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. வளைந்த டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 1600 nits வரை உச்ச பிரகாசத்தையும் வழங்குகிறது. டிஸ்ப்ளே மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பூச்சு இருக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s சிப்செட் மூலம் இயங்குகிறது. 12ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி மாடல்களில் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மை யுஎக்ஸ் மூலம் இயங்குகிறது. 50MP பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது. முன்பக்கம் 32எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. Moto G85 ஆனது Dolby Atmos மற்றும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. IP52 மதிப்பீட்டுடன் வருகிறது. இது தண்ணீரை எதிர்க்கும். 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இது 90 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக், 38 மணி நேரம் டாக் டைம் மற்றும் 22 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் கனெக்ட், ஃபேமிலி ஸ்பேஸ் மற்றும் மோட்டோ செக்யூர் போன்ற மென்பொருள் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்