மோட்டோரோலா ஒரு புதிய இடைப்பட்ட G-சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது - Moto G8 - இது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.
Moto G8 இப்போது பிரேசிலில் பேர்ல் ஒயிட் மற்றும் நியான் ப்ளூ கலர் விருப்பங்களில் வாங்கலாம்
மோட்டோரோலா இறுதியாக Moto G8-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Moto G8 கடந்த சில மாதங்களில் பல இடைப்பட்ட மோட்டோரோலா போன்களில் நாம் பார்த்த ஒரு பழக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வருகிறது.
Moto G8 தற்போது அதிகாரப்பூர்வ மோட்டோரோலா பிரேசில் இணையதளத்தில் (Motorola Brazil website) BLR 1,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000) விலைக் குறியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பேர்ல் ஒயிட் மற்றும் நியான் ப்ளூ வண்ணங்களில் வருகிறது. மோட்டோரோலா அதிகாரப்பூர்வ வலைப்பதிவில், Moto G8 விரைவில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் அதிகமான சந்தைகளில் கிடைக்கும். இந்திய சந்தையில் Moto G8 வருகை குறித்து நாங்கள் Motorola-வை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தைப் புதுப்பிப்போம்.
![]()
Moto G8 என்பது டூயல்-சிம் போனாகும். இது ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.4-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி + (720x1,560 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டுடன் போனில் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு மற்றும் அதில் ஒரு செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலாவின் சமீபத்திய போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Moto G8-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் தொகுதி உள்ளது. இது f/1.7 aperture உடன் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் இது 4கே வீடியோக்களை 30fps மற்றும் 1080p வீடியோக்களை 60fps வரை பதிவு செய்யும் திறன் கொண்டது. இது f/2.2 லென்ஸ் மற்றும் 118 டிகிரி பார்வை கொண்ட 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் f/2.2 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உதவுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு 8 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பரால் கையாளப்படுகின்றன,
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைப் பெறுவீர்கள். Moto G8-ல் 4,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 b/g/n, GPS, AGPS, LTEPP, SUPL, Glonass மற்றும் Galileo ஆகியவை அடங்கும். Moto G8 161.27 × 75.8 × 8.95 மிமீ அளவு மற்றும் 188.3 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report