ஆப்ஷன்களில் சும்மா தெறிக்க விடும் Moto G45 5G

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 17 ஆகஸ்ட் 2024 17:53 IST
ஹைலைட்ஸ்
  • 50 மெகாபிக்சல் Quad Pixel கேமரா இருக்கிறது
  • 8GB ரேம் + 128GB மெமரி மாடலில் வருகிறது
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வரும்

Photo Credit: Flipkart

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Moto G45 5G செல்போன் பற்றி தான். 

Motorola நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G45 5G மாடல் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Moto G64 5G மாடலை விட குறைவாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. 13 ஆயிரம் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த செல்போனில் ஸ்னாப்டிராகன் 6s ஜெனரல் 3 சிப்செட் மற்றும் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  Moto G45 5G  இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. நீலம், பச்சை மற்றும் மெஜந்தா ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வர உள்ளது. 

Moto G45 5G செல்போனின் பின்புற கேமரா அமைப்பு, LED ஃபிளாஷ் அலகுடன் செங்குத்தாக அமைக்கப்பட்ட இரண்டு தனித்தனி வட்ட வடிவ கேமரா ஸ்லாட்டுகளுடன் காணப்படுகிறது. வலது விளிம்பில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. கீழ் விளிம்புகளில் USB Type-C போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இருக்கிறது. பேனலின் மேற்புறத்தில் முன் கேமரா சென்சார் பொருத்துவதற்காக பஞ்ச் ஸ்லாட் உள்ளது. இடது விளிம்பில் சிம் ட்ரே ஸ்லாட் உள்ளது.

Moto G45 5G டிஸ்பிளே பொருத்தவரையில் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் அம்சத்துடன் வருகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிமுகமான பிறகு மற்ற ரேம் மற்றும் மெமரி மாடல்கள் வழங்கப்படலாம். 50 மெகாபிக்சல் குவாட் பிக்சல் இரட்டை பின்புற கேமரா இருக்கிறது. இது மோட்டோரோலாவின் ஸ்மார்ட் கனெக்ட் அம்சத்தை சப்போர்ட் செய்கிறதாகு. இது ஃபோன்களை டேப்லெட்டுகள், பிசிக்கள் மற்றும் பல சாதனங்களுடன் தடையின்றி இணைக்க உதவுகிறது. அனுமதிக்கிறது. 5G சப்போர்ட் செய்கிறது. எங்கு சென்றாலும் தடையற்ற ப்ரவுஸிங், ஸ்ட்ரீமிங் மற்றும் டவுன்லோடிங் ஸ்பீட்டை அனுபவிக்க இது உதவும். 

பின்புறத்தில் உள்ள வேகன் ஸ்கின் பினிஷ் ஆனது இந்த ஸ்மார்ட்போனை இன்னும் ஸ்டைலானதாக காட்டுகிறது. கூடவே டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவையும் கொண்டுள்ளது. இதெல்லாம் சேர்ந்து அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும். கேமரா செட்டப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, அதிக ஸ்டோரேஜிர்காக கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  2. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  3. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  4. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
  5. விரலில் ஒரு Smartwatch! Diesel Ultrahuman Ring வந்துருச்சு! ஹார்ட் ரேட், தூக்கம்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ணலாம்
  6. புது Samsung A-சீரிஸ் வருது! A07 5G இந்த மாசம் லான்ச்? A57-ல் பெரிய அப்கிரேட்! Samsung ஃபேன்ஸ் ரெடியா
  7. புதுசா 2 பிளான்! Disney+ Hotstar, ZEE5-ஐ விட கம்மி விலையில் Tata Play Binge-ல் புது OTT கன்டென்ட்
  8. புது Vivo போன் வாங்க ரெடியா? V70, T5x 5G-க்கு BIS சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! லான்ச் தேதி எப்போ
  9. புது Poco ஃபிளாக்ஷிப் வருது! Poco X8 Pro-க்கு BIS சான்றிதழ்! ₹30,000 ரேஞ்சில் இந்த போனை எதிர்பார்க்கலாமா
  10. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.