12 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்ஸல் சென்சார்கள் அடங்கிய வெர்ட்டிக்கல் டூயல் கேமராவும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சம்
சீனாவில் இந்த ஸ்மார்ஃபோனின் விலை 1,699 சீன் யென்
ஜியோமியின் பட்ஜெட் விலை ஃபேப்லெட்டான எம்.ஐ மேக்ஸ் 3 இன்று சீனாவில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் முக்கிய ஹைலைட்களாக 6.9 இன்ச் பெரிய ஹெச்.டி ஸ்கிரீன், 5500 mAh பேட்டரியும், டூயல் ரேர் கேமரா மற்றும் 4ஜி வோல்ட் தொழில்நுட்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்ஃபோன் டார்க் ப்ளூ, டிரீம் கோல்டு, மீட்டியோரைட் பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது.
விலை:
எம்.ஐ. மேக்ஸ் 3 ஸ்மார்ட்ஃபோன் 1,699 சீன யென்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்புல் 17,300 ரூபாய். 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு இந்த விலை. 6ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜின் விலை 1,999 யென் (20,400 ரூபாய்). ஜூலை 20-ம் தேதி முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
இரண்டு நானோ சிம் ஸ்லாட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், MIUI தீமோடு, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது. குவால்கம் ஆக்டோ கோர ஸ்நாப்டிராகன் 696 SoC பிராசஸரும், 4ஜி.பி/6ஜி.பி LPDDR4X ரேமும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் இருக்கிறது.
12 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்ஸல் சென்சார்கள் அடங்கிய வெர்ட்டிக்கல் டூயல் கேமராவும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சம். ஃபேஸ் ரெகக்னிஷன் மற்றும் சாஃப்ட் லைட் ஃபிளாஷும், கேமாரவுடன் வருகிறது.
ஸ்டோரேஜை பொறுத்தவரை, 64ஜி.பி மற்றும் 128 ஜி.பி என தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள் தரப்படுகின்றன. 4ஜி வோல்ட், வைஃபை 802.11, ப்ளூடூத் வி 5.0, ஜி.பி.எஸ், டைப் சி. யூ.எஸ்.பி மற்றும் 3.5 மி.மீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இந்த ஃபோனில் கொடுக்கப்பட்டுள்ள அமசங்கள்.
இப்போது இதிலிருக்கும் சிறப்பு சென்சார்கள் பற்றி பார்க்கலாம். ஆகசெலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ், கைரோஸ்கோப், இன்ஃப்ரா ரெட் சென்சார், பின் பக்கம் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சாரும் உள்ளது. இதன் 5500mAh பேட்டரி, குயிக் சார்ஜ் அம்சத்துடன் வருகிறது. ஃபோனின் எடை 221 கிராம்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus 16 to Reportedly Come With a 240Hz Dynamic Refresh Rate Screen
OnePlus 15 Launching Today: Know Price in India, Features, Specifications and More