Photo Credit: Weibo
Xiaomi புதிய அறிவிப்புகளை அடுத்த வாரம் வெளியிடவுள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி Mi Charge Turbo-வை அறிமுகப்படுத்தப் போவதாக சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் தற்போது குறைவாகவே வெளியாகியுள்ளது. தற்போது, சியோமி பிப்ரவரி 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 9-ல் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. சமீபத்தில் வெளியான டீசர் போஸ்டர், Mi Charge Turbo 5G சகாப்தத்திற்கானது என்று குறிப்பிடுகிறது, ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி எதுவும் விவரிக்கவில்லை. முன்னதாக, சியோமி நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியது.
Mi சார்ஜ் டர்போ செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை இந்த சீன தொழில்நுட்ப நிறுவனமான வெய்போவிந் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் மேம்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கை வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகப்படுத்தும் என்று அந்த போஸ்டர் தெரிவிக்கிறது. டீசர் பதிவு, “செப்டம்பர் 9, உங்கள் வயர்லெஸ் எதிர்காலத்துடன் பேசுங்கள்” இது மேம்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கைத் தொடங்கக்கூடும் என்று குறிப்பிடுகிறது. முன்னதாக, Mi Mix 4 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியானது, மேலும் இந்த புதிய மி சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகத்தின்போது ஸ்மார்ட்போனுடன் ஒருங்கினைக்கப்பட்டே அறிமுகமாகும்.
டீசர் போஸ்டர் 5G சகாப்தத்தை மனதில் வைத்து Mi Charge Turbo உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. இந்த வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பற்றிய தற்போது வெளியான விவரங்கள் குறைவு, இருப்பினும் செப்டம்பர் 9ஆம் தேதி முழு தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இது மார்ச் மாதத்தில் சோதனை செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு நிறுவனத்தின் தலைவர் லின் பின், சியோமி அதை வெகுஜன உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு செயல்படுவதாகக் கூறினார். 100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பம் வெறும் 17 நிமிடங்களில் 4,000mAh ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இந்த தொழில்நுட்பம் எப்போது சந்தையில் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் ஒரு ரெட்மி ஸ்மார்ட்போனுடன் ஒருங்கிணைத்து இந்த சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்