மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

வாட்டர் ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது இந்த Mi A3 ஸ்மார்ட்போன்

ஹைலைட்ஸ்
 • Mi A3 ஸ்மார்ட்போன் ஸ்பெய்னில் அறிமுகமானது
 • இந்த ஸ்மார்ட்போன் Mi CC9e போலவே அமைந்துள்ளது
 • ஸ்னேப்ட்ராகன் 665 ப்ராசஸரை கொண்டுள்ளது

அதிகாரப்பூர்வமாக சியோமி நிறுவனத்தால் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. Mi A2 ஸ்மார்ட்போனின் அடுத்த ஸ்மார்ட்போனான 'Mi A3' ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் அறிமுகமான Mi CC9e ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் போலவே அமைந்துள்ளது. 

'Mi A3' ஸ்மார்ட்போன்: விலை!

ஸ்பெய்னில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்,  இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் '249 யூரோக்கள்  (19,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அதே நேரம் 128GB அளவு கொண்ட ஸ்மார்ட்போன், 279 யூரோக்கள் (21,500 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Gray) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.  

'Mi A3' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Good cameras
 • Premium build quality
 • Excellent battery life
 • Smooth performance
 • Bad
 • Low-resolution display
 • Hybrid dual-SIM slot
 • Camera is slow to focus at times
 • Aggressive HDR
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 2. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 3. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 4. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 5. வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!
 6. Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!
 7. Google Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 8. ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!
 9. ஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை வெறும் ரூ.3,999தான்!
 10. ரியல்மி பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம்... கூடவே ரியல்மி லேப்டாப் அறிமுகமா?
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com