20,000 ரூபாய் என்ற விலையில் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம்
'Mi A3' ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று அறிமுகமாகவுள்ளது. சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த 'Mi A3' ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.
மனு குமார் ஜெய்ன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 21 அன்று இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதை அறிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 21 அன்று மதியம் 12 மணிக்கு புது டெல்லியில் நடைபெறும்.
'Mi A3' ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் விலை!
ஸ்பெய்னில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் '249 யூரோக்கள் (19,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அதே நேரம் 128GB அளவு கொண்ட ஸ்மார்ட்போன், 279 யூரோக்கள் (21,500 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Gray) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
'Mi A3' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.