ஷாவ்மி எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்!

இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரின் விலை ரூ.2,299 ஆகும்.

ஷாவ்மி எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்!

Mi 30W வயர்லெஸ் சார்ஜர் செங்குத்து காற்று குழாய் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் வழக்கமான விலை ரூ.2,299 ஆகும்
  • இந்த சார்ஜர் நாட்டில் Mi.com மூலம் கிடைக்கும்
  • எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் 30W வரை வயர்லெஸ் சார்ஜிங் வழங்குகிறது
விளம்பரம்

ஷாவ்மி இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து புதிய வயர்லெஸ் சார்ஜருக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் வேகம் கிடைக்கும். இது Qi சார்ஜிங் தரத்தை அடிப்படையாகக் கொண்டது.

இது வெப்பத்தை குறைக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறியைக் (cooling fan) கொண்டுள்ளது. சந்தையில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜருடன் கடுமையாக போட்டியிடும். 

 
வயர்லெஸ் சார்ஜர் விலை:

இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரின் விலை ரூ.2,299 ஆகும். இருப்பினும், இந்த சார்ஜர் ரூ.1,999-க்கு சிறப்பு முன்கூட்டிய ஆர்டர் விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை மே 18 ஆம் தேதி Mi.com இணையதளத்தில் தொடங்கும்.


வயர்லெஸ் சார்ஜர் விவரங்கள்:


எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரில் ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறி உள்ளது. இது சாதனம் அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது. இது செங்குத்து காற்று குழாய் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இணைக்கப்பட்ட போனில் நேரடியாக காற்றை அனுப்புகிறது மற்றும் வெப்பத்தை கட்டுபடுத்துகிறது.

Mi 30W வயர்லெஸ் சார்ஜர் Qi தரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பொருள், Mi 10 5G-ஐ சார்ஜ் செய்வதைத் தவிர, இந்த வயர்லெஸ் சார்ஜரை Apple மற்றும் Samsung போன்ற நிறுவனங்களின் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு சாதனங்களுக்கு பயன்படுத்தலாம். சார்ஜர் 30W வரை வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகிறது. ஆனால் ஷாவ்மி அல்லாத போன்களுக்கு 10W வரை வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  2. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  3. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  4. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  5. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  6. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
  7. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா
  8. iPhone 17 ஆர்டர் பண்ணீட்டீங்களா? பெரிய ஷாக் காத்திருக்கு! விநியோகம் தாமதமாகும்னு ஆப்பிள் சொல்லுது
  9. ஐபோன் 14 வாங்க இதுதான் சரியான நேரம்! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 40,000க்கும் குறைவான விலையில்
  10. நத்திங் ஃபேன்ஸ் ரெடியா? புது இயர் 3-ல ‘டாப் பட்டன்’ இருக்காம்! அது எதுக்குன்னு தெரியுமா
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »