Mi 10 Youth Edition-ன் விவரங்கள் வெளியாகின!

Mi 10 Youth Edition 48 மெகாபிக்சல் பிரதான ஷூட்டருடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

Mi 10 Youth Edition-ன் விவரங்கள் வெளியாகின!

Photo Credit: TENAA

Mi 10 Youth Edition-ல் குவாட் கேமரா அமைப்பு உள்ளது

ஹைலைட்ஸ்
  • Mi 10 Youth Edition ஏப்ரல் 27-ஆம் தேதி சீனாவில் வெளியாகவுள்ளது
  • பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பை கொண்டு வர முனைகிறது
  • இது சமீபத்தில் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது
விளம்பரம்

ஷாவ்மி, ஏப்ரல் 27-ஆம் தேதி சீனாவில் Mi 10 Youth Edition-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் தனிப்பயன் தோல் MIUI UI-ன் சமீபத்திய பதிப்பில் வேலை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில கசிவுகள் இந்த சாதனம் சீனாவில் 5 ஜி இணைப்பு ஆதரவுடன் வரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சான்றிதழ் வலைத்தளமான TENAA-வில் காணப்பட்டது. இது சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதன் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

TEMAA-வில் உள்ள Mi 10 Youth பட்டியல், சாதனம் M2002J9E மாடல் எண்ணுடன் வரும். இந்த பட்டியலில் சாதனத்தின் சில புகைப்படங்களும் உள்ளன. அவை வரவிருக்கும் ஷாவ்மி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைக் காட்டுகின்றன. Mi 10 Youth Edition-ல் 6.57 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என்று பட்டியல் தெரிவிக்கிறது. போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு இருக்கும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. Mi 10 Youth Edition-ல் உள்ள முதன்மை பின்புற கேமரா 48 மெகாபிக்சல் சென்சார், 4 கே வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது.

Mi 10 Youth Edition-ன் செயலி பற்றிய தகவல்கள் கிடைக்கவில்ல. ஆனால் இந்த செயலியின் அதிகபட்ச கடிகார வேகம் 2.4GHz ஆக இருக்கும் என்று பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்டுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. அவை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜில் வரும். இந்த ஸ்மார்ட்போன் 4060 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 164.06 x 72.77 x 7.98 மில்லிமீட்டர் அளவுடன் வரும்.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 10 Youth Edition ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 10 Lite-ல் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். Youth Edition-ன் கேமரா அமைப்பு 50x ஜூமை ஆதரிக்கும். இதற்காக நிறுவனம் ஏற்கனவே பெரிஸ்கோப் அமைப்பை சேர்ப்பது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. போனின் கேமரா அமைப்பு AI அடிப்படையிலானதாக இருக்கும்.

அதே மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போனும் சமீபத்தில் கீக்பெஞ்சில் காணப்பட்டது. இங்கே போன் ஒற்றை கோர் சோதனையில் 611 மற்றும் மல்டி கோர் சோதனையில் 1917 மதிப்பெண்களைப் பெற்றது. பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட சாதனம் அடிப்படை கடிகார வேகம் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் பட்டியலிடப்பட்டது. இது தவிர, போனின் கீக்பெஞ்ச் பட்டியலிலிருந்தும் இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் வேலை செய்யும் என்பது தெரியவந்தது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இரண்டு ஸ்கிரீன்.. தரமான கேமரா! லாவா பிளேஸ் டியோ 3 அமேசான் தளத்தில் சிக்கியது! கம்மி விலையில் ஒரு மெகா லான்ச்
  2. "ஸ்லோ டிவி" பிரச்சனைக்கு எண்டு கார்டு! 4K QLED மற்றும் Mini LED வசதியுடன் Lumio டிவிகள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தாச்சு
  3. பவர்ஃபுல் போன்.. பட்ஜெட் விலை! Flipkart-ல் Redmi Note 14 Pro Plus மீது அதிரடி விலைக்குறைப்பு! உடனே முந்துங்கள்
  4. எந்த போன் வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? இதோ அமேசான் சேல் 2026-ன் டாப் 10 மொபைல் டீல்கள்! விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் உள்ளே
  5. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் Samsung மற்றும் OnePlus சாதனங்களுக்கு மெகா ஆஃபர்
  6. S25 போன் வச்சிருக்கீங்களா? ஜனவரி அப்டேட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாம்சங் செய்யப்போகும் மெகா மாற்றங்கள்
  7. கையில வாட்ச்.. காதுல பட்ஜ்.. பட்ஜெட்டுக்குள்ள ஆஃபர்ஸ்! அமேசான் ரிபப்ளிக் டே சேல் 2026 - அதிரடி வேரபிள் டீல்கள் இதோ
  8. ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ
  9. Apple MacBook முதல் Gaming Laptops வரை - அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு! எதை வாங்கலாம்? முழு விவரம் இதோ!
  10. பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் Samsung போன்! Galaxy A35 விலையில் ₹14,000 சரிவு! இப்போவே செக் பண்ணுங்க
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »