108-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Xiaomi Mi 10, Mi 10 Pro...! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
108-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Xiaomi Mi 10, Mi 10 Pro...! 

Mi 10, 12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.0 ஸ்டோரேஜை பேக் செய்கிறது

ஹைலைட்ஸ்
 • Mi 10 & Mi 10 Pro இரண்டும் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறன
 • 2 போன்களிலும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்பிளே இடம்பெறுகிறது
 • Mi 10 Pro, 50W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் & 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது

ஜியோமி இரண்டு புதிய முதன்மை போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது - Mi 10 மற்றும் Mi 10 Pro. இரண்டு புதிய Mi போன்களும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகின்றன. Mi 10 மற்றும் Mi 10 Pro இரண்டும் 108 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பரை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன.


Xiaomi Mi 10 விலை:

Mi 10 அடிப்படை 8GB + 128GB வேரியண்ட் CNY 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000)-ல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8GB + 256GB மாடல் CNY 4,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,000) மூலம் வாங்குபவர்களை திருப்பித் தரும். Mi 10-ன் டாப்-எண்ட் 12GB + 256GB பதிப்பிற்கு CNY 4,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000) செலவாகும். இது Titanium Silver Black, Peach Gold மற்றும் Ice Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். Mi 10-க்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று தொடங்குகின்றன. இது சீனாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் முறையாக விற்பனைக்கு வரும். ஜியோமி CNY 129 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,300) விலையில் குளிரான இணைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, நிறுவனம் 65W சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை CNY 149 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) ஆகும்.


Xiaomi Mi 10 Pro விலை:

Mi 10 Pro-வின் 8GB + 256GB வேரியண்ட் CNY 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000)-ல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 12GB + 256GB மாடல் CNY 5,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.55,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் டாப்-ஆஃப்-லைன் 12GB + 512GB வேரியண்டைப் பொறுத்தவரை, இதன் விலை CNY 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000) ஆகும். Mi Pro இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கும் தயாராக உள்ளது, அதே நேரத்தில் அதன் முதல் விற்பனை பிப்ரவரி 18 அன்று சீனாவில் தொடங்கும். இது Pearl White மற்றும் Starry blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது. நேரம் மற்றும் அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான சிறிய இடத்தைக் கொண்ட ஒரு பாதுகாப்பு கேசையும் ஜியோமி தொடங்கியுள்ளது. இது ஒரு சிவப்பு நிறத்தில் வருகிறது மற்றும் இதன் விலை CNY 69 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.700) ஆகும்.


Xiaomi Mi 10 விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Mi 10, Android 10 அடிப்படையிலான MIUI 11-ல் இயங்குகிறது. இது 90Hz refresh rate, 180Hz touch sampling rate மற்றும் hole-punch வடிவமைப்புடன் 6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது.

mi 10 pro Mi 10

Xiaomi Mi 10 Pro அதன் புகைப்பட வலிமைக்காக 124 என்ற மதிப்பெண்ணை DxOMark வழங்கியுள்ளது 

Mi 10 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 7-element lens, 1/1.33-inch சென்சார் மற்றும் OIS ஆதரவுடன் 108 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது. இது 123-degree field of view மற்றும் f/2.4 aperture உடன் 13 மெகாபிக்சல் wide-angle லென்ஸ், f/2.4 lenses உடன் 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் சே ர்ந்துள்ளது. இந்த போன் 7,680x4,320 பிக்சல்கள் தீர்மானத்தில் 8K வீடியோக்களைப் பிடிக்க பயனர்களை அனுமதிக்கும். செல்பி கையாள ஒரு 20 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது.

Mi 10-ல் 4,780mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 30W வயர்டு சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.


Xiaomi Mi 10 Pro விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Mi 10 Pro, Android 10 அடிப்படையிலான MIUI 11-ல் இயங்குகிறது. இது 90Hz refresh rate, 1,200 nits of peak brightness, 5,00,000:1 contrast ratio, DC Dimming, DCI-P3 colour gamut ஆதரவு மற்றும் 180Hz touch sampling rate உடன் 6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR10+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 12GB LPDDR5 RAM மற்றும் 512GB UFS 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது.

Mi 10 உடன் ஒப்பிடும்போது Mi 10 Pro மிகவும் சக்திவாய்ந்த குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 8-element lens, 1/1.33-inch sensor size மற்றும் OIS உடன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இது f/2.2 lens மற்றும் 117-degrees field of view உடன் 20 மெகாபிக்சல் wide-angle கேமரா உதவுகிறது. f/2.0 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் கேமராவும், f/2.0 lens, 10x  zoom மற்றும் OIS ஆதரவுடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. Mi 10 Pro-க்கு 124 என்ற புகைப்பட மதிப்பெண்ணை DxOMark வழங்கியுள்ளது, அதாவது இப்போது புகைப்படம் எடுக்கும் திறனுக்கான சிறந்த மதிப்பிடப்பட்ட ஸ்மார்ட்போன் இதுவாகும்.

Mi 10 Pro 50W வயர்டு வேகமான சார்ஜிங், 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்  ஆதற்றவுடன் சிறிய 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Mi 10 மற்றும் Mi 10 Pro இரண்டும் dual-mode 5G (SA + NSA) மற்றும் Wi-Fi 6 standard-ஐ ஆதரிக்கின்றன. Mi 10 Pro, 162.6x74.8x8.96mm அலவீட்டையும் 208 எடையையும் கொண்டதாகும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Xiaomi Launches Mi Full Screen TV Pro 75-Inch, Mi TV 4A 60-Inch
 2. குறைந்த விலையில் Wireless Earphones - அசத்தும் சோனி நிறுவனம்!
 3. 8 நாள் பேட்டரி, டூயல் கேமராவுடன் வெளியான Xiaomi-யின் ஸ்மார்ட் வாட்ச்!
 4. ஜிஎஸ்டி உயர்வால் இந்தியாவில் நோக்கியா போன்களின் விலை உயர்வு! 
 5. 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வோடபோனின் புதிய ப்ளான்கள் அறிமுகம்! 
 6. ஆச்சர்யமூட்டும் அப்டேட் கொடுத்த ஷாவ்மி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பயனர்கள்!!
 7. ரிலீஸுக்கு முன்பே லீக்கான புதிய ஐபோன் எஸ்இ விவரங்கள்! 
 8. ஷாவ்மியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்! 
 9. Zoom ஆப் பயன்படுத்துறீங்களா..? - வெளிவரும் உண்மைகள்... உஷார் மக்களே உஷார்!!
 10. 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 8 பவர் லைட்! 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com