Photo Credit: Techdroider
ஜியோமி தலைமை நிர்வாக அதிகாரி லெய் ஜுன் (Lei Jun) 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் Mi 10 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் வெளிப்படுத்தியிருந்தார். சீனாவிலிருந்து ஒரு புதிய கசிவு Mi 10 மற்றும் Mi 10 Pro ஆகியவை பிப்ரவரி 13-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கிறது. இந்த கசிவு ,Mi 10 பிப்ரவரி 14 அன்று அதாவது இப்போது சில நாட்களில் விற்பனைக்கு வரும் என்று குறிக்கிறது. மறுபுறம், Mi 10 Pro பிப்ரவரி 18 முதல் வெளியீட்டை தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜியோமி, ஆன்லைனில் மட்டுமே Mi 10 சீரிஸின் வெளியீட்டு நிகழ்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் ஜியோமிஷ்காவால் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவிலிருந்து ஒரு புதிய கசிவு படி, Mi 10 மற்றும் Mi 10 Pro வெளியீட்டு நிகழ்வு அறிவிப்பு பிப்ரவரி 7-ஆம் தேதி செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்ததால், ஜியோமி பிப்ரவரி 13-ல் ஆன்லைன் வெளியீட்டு மாநாட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. Mi 10 வெண்ணிலா வேரியண்ட் அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 14-ஆம் தேதி விற்பனைக்கு வர முனைகிறது. அதே நேரத்தில் Mi 10 Pro பிப்ரவரி 18-ஆம் தேதி விற்பனைக்கு வரும். Mi 10 Pro விற்பனை பின்னர் தொடங்கும் என்றாலும், CNY 100 வைப்புத்தொகையுடன் முன் பதிவுசெய்தல் முன்பே தொடங்கவும். இந்த வதந்தி உண்மையாக இருந்தால், Mi 10 சீரிஸ் வெளியீடுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. பின்னர் அனைத்து அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியிடப்பட வேண்டும்.
Mi 10 Pro வேரியண்டின் முக்கிய விவரக்குறிப்புகள் (Key specifications) 6.4-இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 SoC, 16 ஜிபி வரை ரேம், குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவை அடங்கும். குவாட் ரியர் கேமரா அமைப்பில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 12 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் நான்காவது சென்சார் ஆகியவை அடங்கும். பேட்டரி 5,250mAh வேகத்தில் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. மேலும், இந்த போன் MIUI 11.20.1.21-ல் இயங்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் நேரடி படக் கசிவு (Live image leak) Mi 10 சீரிஸ் hole-punch டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்