ஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்! 

எம்ஐ 10 லைட் 5ஜி பல கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
 • எம்ஐ 10 லைட் 5ஜி மே மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும்
 • ஸ்மார்ட்போன் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது
 • எம்ஐ 10 லைட் 5ஜி 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது

எம்ஐ 10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை Xiaomi வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாகும். புதிய மாடல் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்பிளே நாட்சுடன் வருகிறது. இந்த போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. 


எம்ஐ 10 லைட் 5ஜி விலை:

Mi 10 Lite 5G-யின் விலை யூரோ 349 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,200)-யாக உள்ளது. ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தைகளில் மே மாத தொடக்கத்தில் நான்கு தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


எம்ஐ 10 லைட் 5ஜி விவரங்கள்:

எம்ஐ 10 லைட் 5ஜி, 6.57 இன்ச் AMOLED TrueColor டிஸ்பிளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சுடன் கொண்டுள்ளது. இந்த போனில், ஆக்டா கோர் Qualcomm Snapdragon 765G SoC உள்ளது. இது LPDDR4X ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் திறன் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. ஸ்மார்ட்போன் நைட் மோட் 2.0, ஏஐ டைனமிக் ஸ்கைஸ்கேப்பிங் மற்றும் வ்லோக் மோட் போன்ற அம்சங்களும் உள்ளன.

எம்ஐ 10 லைட் 5ஜியில், 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,160mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவு சார்ஜ் 3.5-ஐ ஆதரிக்கிறது. தவிர, இது டிஸ்பிளே கைரேகை சென்சாருடன் வருகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. டிக்டாக்கிற்கு சவால் விடும் 'மித்ரன் ஆப்'! - 50 மில்லியன் பதிவிறக்கத்தை கடந்தது!!
 2. டிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்!
 3. இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்!
 4. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!
 5. 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!
 6. சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!
 7. 4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!
 8. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
 9. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com