LG W30 Pro-வின் விலை விவரங்களையும், கிடைக்கும் விவரங்களைப் பற்றியும் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளன. LG W10 மற்றும் LG W30 தொலைபேசிகளுடன் ஜூன் மாதத்தில் இந்த தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் விலைக் குறியீடு மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இப்போது, LG W30 Pro கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் அமேசான் இந்தியாவில் மட்டுமே விற்பனையில் கிடைக்கிறது.
இந்தியாவில் LG W30 Pro-வின் விலை:
இந்தியாவில் LG W30 Pro-வின் விலை ரூ. 12,490-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே Amazon India-வில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போன், Midnight Blue மற்றும் Midnight Purple ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது. அமேசான் தற்போது எக்ஸ்சேஞ் சலுகைகள், no-cost EMI ஆப்ஷன், Citibank கிரெடிட் கார்டு மற்றும் டெபிக் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியுடன் ரூ. 2000 வரையும், மற்றும் Yes Bank கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அடங்கும் என்று பட்டியலிட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, LG W10 மற்றும் LG W30 உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
LG W30 Pro-வின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) LG W30 Pro, Android Pie-யால் இயங்குகிறது. 19:9 aspect ratio மற்றும் 86.83 percent screen-to-body ratio உடன் 6.21-inch HD+ FullVision டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Snapdragon 632 SoC-யால் இயக்கப்படுகிறது. 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் microSD card வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியவை.
LG W30 Pro-வானது 13-megapixel முதன்மை சென்சார், 5-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8-megapixel மூன்றாம் நிலை wide-angle சென்சார் ஆகியவற்றுடன் triple rear கேமரா அமைப்பையும் உள்ளடக்கியது. முன்புறத்தில், 16-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது. Face Unlock மற்றும் Bokeh Effect ஆகிய அம்சத்தையும் கொண்டுள்ளது.
LG W30 Pro-வின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, OTG ஆதரவுடன் USB ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, fingerprint, gyroscope மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். இந்த போன் fast charging ஆதரவுடன் 4,050mAh Li-polymer பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, 157.7x75.9x8.3mm அளவீட்டியும், 172.7 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்