Photo Credit: Twitter/ Ice Universe
எல்ஜி நிறுவனம் தனது வலைப்பதிவில் புதிய எல்ஜி வெல்வெட் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த போன் வித்தியாசமான வடிவமைப்புகளை சந்தையில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சீரிஸ் ஸ்டைலானதாக இருப்பதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் எல்ஜி வெல்வெட்டின் கான்செப்ட் ஸ்கெட்ச் மூன்று கேமராக்கள் மற்றும் ஒரு எல்.ஈ.டி ஃபிளாஷ் பின்புறம் உள்ளது. மேலும், போனின் கான்செப்ட் ரெண்டர்கள் ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டுள்ளன.
புதிய எல்ஜி போனின் டிரிபிள் கேமரா அமைப்பில் ரெயின்டிராப் வடிவமைப்பை தெளிவாக காட்டுகிறது. போனின் பிரதான கேமரா மற்ற போன்களை விட பெரியதாக இருக்கும். முன் டிஸ்பிளே திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுடன் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் திரையின் மேல் மற்றும் கீழ் விளிம்பில் வளைந்த விளிம்புகள் மற்றும் குறைந்தபட்ச பெசல்களுடன் வருவதைக் காணலாம்.
போனின் ‘வெல்வெட்' பிராண்டிங் மையத்தில் பின்புற பேனலில் உள்ளது. பின்புற கைரேகை சென்சார் இல்லை மற்றும் எல்ஜி போர்டில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் சேர்க்கக்கூடும். இந்த போன், சிவப்பு, நீலம், ஊதா, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களி வரும் என்று ரெண்டர்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் இப்போது எல்ஜி வெல்வெட்டாக விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்