இந்தியாவில் LG V40 ThinQ ஒரு புதிய மென்பொருள் அப்டேட்டை பெறுகிறது. LG V40 ThinQ கடந்த ஆண்டு ஜனவரியில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் இந்திய சந்தைக்கு வந்தது.
இந்த புதிய அப்டேட் போனில் VoWi-Fi ஆதரவைக் கொண்டுவருகிறது. இந்த அம்சம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களை வைஃபை அழைப்பை பயன்படுத்த அனுமதிக்கிறது. LG V40 ThinQ அப்டேட் Digital Wellbeing கருவிகளுடன் வருகிறது மற்றும் PKQ1.190202.011 என்ற பில்ட் எண்ணைக் கொண்டுள்ளது. இந்த அப்டேட்டின் அளவு 709.53MB.
இந்த அப்டேட்டில் மார்ச் 2020 Android security patch, native screen recorder ஆகியவை அடங்கும். அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்க பயனர்கள் Settings > System > Update centre-க்கு செல்லவும்.
மந்தமான நெட்வொர்க் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த VoWi-Fi அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Airtel அல்லது Reliance Jio-வைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் LG V40 ThinQ-வில் அப்டேட் செயல்முறையை முடித்த பிறகு, வைஃபை அழைப்பைப் பயன்படுத்த முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்