LG Q7 போன்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னர் வந்த Q சீரிஸ் போன்களைப் போல் அல்லாமல் தற்போது வந்திருக்கும் இந்த போன் மூன்று வகை வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. AI பொருத்தப்பட்ட கேமரா இருப்பதால், நல்ல புகைப்படங்கள் கிடைக்கும். இப்போது சந்தையில் விடப்பட்டிருக்கும் மூன்று வகைகளுக்கு LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த போன்களுக்கு பிரத்யேகமான மிலிட்டரி கிரேடு மெட்டாலிக் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போன்களின் விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு இந்த போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விடும் என்று LG நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவைத் தொடர்ந்து வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இந்த புதிய போன்கள் விற்பனைக்கு வரும்.
LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha போன்களில் இருக்கும் வசதிகள்
LG G7 ThinQ, போன்று LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha போன்களிலும், போர்ட்ரெய்ட் மோட், க்யூ லென்ஸ், ஹை-ஃபை ஆடியோ, சரௌண்டு சத்தம் என எல்லாம் இருக்கிறது. போனின் பின் பக்கம் ஸ்மார்ட் ஃபின்கர் பிரின்ட் இருக்கின்றது. அது கேமரா ஷட்டர் பட்டனாகவும் மாறுகிறது. அது ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதற்கும் உதவுகிறது. இந்த போனின் மூலம் கனெக்ட் செய்யப்படும் இயர் போன்களில் கேட்கும் சத்தமும் மிக நன்றாக இருக்கும். ஏனென்றால், இதில் ஹை-ஃபை Quad DAC தொழில்நுட்பம் வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மூன்று வகை ஸ்மார்ட் போன்களுக்கும் IP68 சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் நீர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் இருப்பதால், மிகப் பாதுகாப்பான ஸமார்ட் போனாகவே இருக்கும். இந்த போன்கள் அரோரா பிளாக், மொராக்கான் ப்ளூ, மற்றும் லாவண்டர் வயலட் ஆகிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்