அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 'எல்ஜி கே12+' ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2019 17:18 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் அங்கு ரூ.21,200 மதிப்புக்கு விற்பனையாகுகிறது.
  • எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் இடம்பெற்றுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் போட்ரேட் மோட்வுடன் வெளியாகுகிறது.

இந்த எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் ஹெச்டி திரையை கொண்டுள்ளது.

எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பிரேசிலில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செய்ற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படுத்தியிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. 8 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், போட்ரேட் மோட் கொண்டு ஒரு புகைப்படத்தின் பேக்கிரவுண்டு இமேஜ் அமைப்பை பிளர் ஆக்க மற்றும் முன்புறத்தை பொளிவூட்டவும் செய்யும்.
 

எல்ஜி கே12+ ஸ்மார்ட்போனின் விலை: 

பிரேசிலில் வெளியாகியுள்ள இந்த எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் அங்கு ரூ.21,200 மதிப்புக்கு விற்பனை செய்யப்படுகறிது. இந்த தயாரிப்பு மோரோக்கன் புளூ, பிளாட்டினம் கிரே மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வெளியாகின்றன. இந்தியாவில் எல்ஜி கே12+ வெளியாகும் தேதி பற்றிய தகவல் ஏதும் அறியப்படாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

எல்ஜி கே12+ அமைப்புகள்:

எல்ஜி-யின் புதிய தயாரிப்பான இந்த எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியா மற்றும் 5.7 இஞ்ச் ஹெச்டி திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியா டெக் ஹூலியோ P22 (MT6762) SoC மற்றும் 3ஜிபி ரேம் கொண்டு பவரூட்டப்பட்டுள்ளது.

16 மெகா பிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ள எல்ஜி கே12+ தயாரிப்பு ஹெச்டிஆர் மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் வசதிகளை கொண்டுள்ளன.

இந்த போனின் சிறப்பம்சமாக செயற்கை நுண்ணிறிவு தொழிநுட்பத்தைத் தனது கேமராவுடன் இணைத்துள்ளது. இதன் மூலம் கேமரா ஆன் செய்யப்பட்ட பிறகு தானாக புகைப்படத்தை மேம்படுத்துகிறது. அதுபோல் கூகுள் லென்ஸ் வசதியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. செல்ஃபி ஸ்பெஷலுக்காக முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமரா இந்த போனில்ல இடம் பெற்றுள்ளது. 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த தயாரிப்பு 4ஜி LTE, 3,000mAh பேட்டரி போன்ற பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

 
KEY SPECS
Display 5.70-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1
Resolution 720x1440 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG K12 Plus price, LG K12 Plus specifications, LG K12 Plus, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.