எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பிரேசிலில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செய்ற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படுத்தியிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. 8 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், போட்ரேட் மோட் கொண்டு ஒரு புகைப்படத்தின் பேக்கிரவுண்டு இமேஜ் அமைப்பை பிளர் ஆக்க மற்றும் முன்புறத்தை பொளிவூட்டவும் செய்யும்.
பிரேசிலில் வெளியாகியுள்ள இந்த எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் அங்கு ரூ.21,200 மதிப்புக்கு விற்பனை செய்யப்படுகறிது. இந்த தயாரிப்பு மோரோக்கன் புளூ, பிளாட்டினம் கிரே மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வெளியாகின்றன. இந்தியாவில் எல்ஜி கே12+ வெளியாகும் தேதி பற்றிய தகவல் ஏதும் அறியப்படாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
எல்ஜி-யின் புதிய தயாரிப்பான இந்த எல்ஜி கே12+ ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியா மற்றும் 5.7 இஞ்ச் ஹெச்டி திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியா டெக் ஹூலியோ P22 (MT6762) SoC மற்றும் 3ஜிபி ரேம் கொண்டு பவரூட்டப்பட்டுள்ளது.
16 மெகா பிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ள எல்ஜி கே12+ தயாரிப்பு ஹெச்டிஆர் மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் வசதிகளை கொண்டுள்ளன.
இந்த போனின் சிறப்பம்சமாக செயற்கை நுண்ணிறிவு தொழிநுட்பத்தைத் தனது கேமராவுடன் இணைத்துள்ளது. இதன் மூலம் கேமரா ஆன் செய்யப்பட்ட பிறகு தானாக புகைப்படத்தை மேம்படுத்துகிறது. அதுபோல் கூகுள் லென்ஸ் வசதியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. செல்ஃபி ஸ்பெஷலுக்காக முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமரா இந்த போனில்ல இடம் பெற்றுள்ளது. 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த தயாரிப்பு 4ஜி LTE, 3,000mAh பேட்டரி போன்ற பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்