எல்ஜி ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போன் notifications-க்காக இரண்டாவது 0.9 அங்குல மோனோ திரையைக் கொண்டுள்ளது.
எல்ஜி ஃபோல்டர் 2-வில் AI Voice Service பொத்தான் உள்ளது
எல்ஜியின் புதிய ஃபோல்டர் 2 போன் அறிமுகம். இது டூயல்-ஸ்கிரீன் ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன், எளிமையான போன்களை விரும்பும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது.
LG Folder 2-வின் விலை KRW 198,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,400)
இந்த போன் ஏப்ரல் 17 முதல் தென் கொரியாவில் கிடைக்கும்.
இது புதிய பிளாட்டினம் கிரே மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
LG-யின் புதிய ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த போன், 2.8 இன்ச் QVGA டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது வெளியில் 0.9 அங்குல மோனோ டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இது, text messages, calls, time battery life மற்றும் signal strength ஆகிய notifications-ஐ காட்டுகிறது.
இது 8 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கலாம். இந்த போன் 1470 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இது 4 ஜி, புளூடூத் 4.1, வைஃபை மற்றும் ஜி.பி.எஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போன், text message மூலம் இருப்பிட தகவலையும் அனுப்புகிறது.
இதில் SOS Key மற்றும் AI Voice Service பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள SOS விசை 1.5 விநாடிகளுக்குள் மூன்று முறை விரைவாக அழுத்துவதன் மூலம் முன்பே பதிவுசெய்யப்பட்ட எண்ணை அழைக்க பயனர்களை அனுமதிக்கிறது.
இந்த hotkey பொத்தானை அழுத்துவதன் மூலம், வானிலை, தேதி, நேரம் மற்றும் எளிய கணக்கீடுகள் குறித்து கேள்விகளைக் கேட்கும்போது AI Voice service அங்கீகரித்து பதிலளிக்கிறது. எல்ஜி ஃபோல்டர் 2 தற்செயலாக டேட்டா கட்டணங்களைத் தடுக்க data security lock function-ஐ கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online