இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 9 அன்று சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
3 வகைகளில் 'லெனோவா Z6' ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது
'லெனோவா Z6' ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா, க், 4,000mAh பேட்டரி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. முன்னதாக லெனோவா Z6 Pro மற்றும் லெனோவா Z6 யூத் எடிசன் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் இந்த அண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அந்த பட்டியலில் 'லெனோவா Z6' ஸ்மார்ட்போனும் இணைந்துள்ளது. 3 பின்புற கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன், 24 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல் என்ற அளவுகளில் மற்ற இரண்டு கேமராக்களையும் கொண்டுள்ளது
'லெனோவா Z6' ஸ்மார்ட்போனின் விலை!
இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் மூன்று வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 1,899 யுவான்கள் (19,000 ரூபாய்) என்ற விலையில் 6GB RAM + 64GB சேமிப்பு அளவை கொண்ட ஸ்மார்ட்போனும், 2,099 யுவான்கள் (21,000 ரூபாய்) என்ற விலையில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்ட ஸ்மார்ட்போனும், 2,499 யுவான்கள் (25,000 ரூபாய்) என்ற விலையில் 8GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்ட ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Blue) என்ற ஒரே வண்ணத்தில் மட்டும்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 9 அன்று சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
'லெனோவா Z6' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
'லெனோவா Z6' ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.39-இன்ச் OLED திரை, 19.5:9 திரை விகிதம், 93.1 சதவிகித அளவிலான திரை-உடல் விகிதத்தையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது.
3 பின்புற கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன், 24 மெகாபிக்சல் முதன்மை கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8x ஹைபிரிட் ஜூம் வசதிகளை கொண்ட கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில், 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4,000mAh அளவிலான பேட்டரியுடன் 15W அதிவேக சார்ஜர் வசதியையும் கொண்டுள்ளது. ப்ளூடூத், வை-பை வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. 159 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 157x74.5x7.97mm அளவுகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film