Photo Credit: Weibo
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த லெனோவா 5 குறித்து வெளியிட்டிற்கு முன்னவே அந்நிறுவனம் பல தகவல்களை வெளியிட்டு எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. எனினும் அந்த எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை. லெனோவா நிர்வாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் லெனோவா z5ப்ரோ வெளிவரும் என்று கூறியிருந்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
தற்போது அந்நிறுவனத்தின் துணை தலைவர் சாங் செங் லெனோவா z5ப்ரோவின் போஸ்டர்களை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டர்களை கொண்டு லெனோவா z5ப்ரோவில், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் மற்றும் ஜியோமி எம்.ஐ மிக்ஸ் 3ல் இருப்பது போன்ற கேமிரா ஸ்லைடர்கள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென் வலைதளத்தில் வெளியிட்டுள்ள லெனோவா z5ப்ரோவின் போஸ்டர்கள் நவம்.1 ஆம் தேதி போன் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதனை வெளிப்படுத்தியுள்ளது. போஸ்டரைக் கொண்டு போனின் பின்புறம் கேமிரா ஸ்லைடர் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு போஸ்டரில் மேல் பக்கம் இரண்டு சென்சார்கள் மற்றும் டூயல் கேமிராக்கள் இருப்பதை குறிக்கிறது. மேலும், இது இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இருக்குமென்பதை வெளிப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தினரிடம் இருந்து வெளிவரும் தொடர்ச்சியான போலி வாக்குறுதிகளால், தற்போது வெளிவந்திருக்கும் போஸ்டர் கொடுக்கும் தகவல்களை நம்புவது சற்று கடினமே. இதுகுறித்த உண்மையான தகவல்களை போன் வெளியானதும் காண்போம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்