லெனோவா z5 ப்ரோ ஜிடி ஸ்மார்ட்போனானது நேற்று அறிமுகமானது. இந்த போன் உலகின் முதல் குவால்காம் 855 கொண்டு வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 12ஜிபி ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது சந்தையில் இதுவே முதல்முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை கொண்டு இயங்குகிறது. இந்த போன் நாட்ச் டிஸ்பிளே கொண்டிருக்கவில்லை.
லெனோவா Z5 ப்ரோ ஜிடி விலை,
லெனோவா Z5 ப்ரோ ஜிடி 6ஜிபி ரேம்/ 128ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலையானது CNY 2,698 (தோராயமாக ரூ.27,700) ஆகும். 8ஜிபி ரேம்/ 128ஜிபி நினைவகம் கொண்ட மாடலுக்கு CNY 2,698 (தோராயமாக ரூ.30,800) ஆகும். 8ஜிபி ரேம்/ 256ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலையானது CNY 3,398 (தோராயமாக ரூ.41,100) ஆகும். இதன் உட்சபட்ச மாடலான 12ஜிபி ரேம்/ 512ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 4,398 (தோராயமாக ரூ.45,100) ஆகும்.
சீனாவில் வரும் ஜனவரி 15 முதல் லெனோவா Z5 ப்ரோ ஜிடி விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது, காரபன் பிளாக் கலர் மற்றும் கார்பன் பைபர் பினிஷ் டாப் கொண்டுள்ளது. உலக முழுவதும் இந்த மொபைல் எப்போது வெளியாகிறது என்பது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.
லெனோவா Z5 ப்ரோ ஜிடி சிறப்பம்சங்கள்,
டூயல் சிம் கொண்ட லெனோவா Z5 ப்ரோ ஜிடி zui 10.0 ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது இதில் 6.39 இன்ச் புல் எச்.டி + (1080x2340 பிக்செல்ஸ்) சூப்பர் அமொல்ட் டிஸ்பிளே உடன் 19.5:9 அக்ஸசப்பட் ரேஸியோ கொண்டுள்ளது. இதில் கார்னரிங் கொரில்லா கிளாஸ்சும் கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 855, லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்ட்போனானது, 6ஜிபி, 8 ஜிபி, மற்றும் 12ஜிபி ரேம் வகைகளில் கிடைக்கிறது. இந்த போனில் பின்பக்கம் டூயல் கேமரா, 16 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் f/1.8 அப்பர்ச்சர் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் உடன் 24 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் உடன் f/1.8 அப்பர்ச்சர் உடன் கிடைக்கிறது.
லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்டபோனின் முன்பக்கமும் டூயல் கேமரா கொண்டுள்ளது. ஒன்று 16 மெகா பிக்ஸெல்ஸ் f/2.2 மற்றும் 8 மெகா பிக்செல்ஸ் ஐஆர் சென்சார் மற்றும் பேஸ்அன்லாக் உடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்