ஸ்னாப்டிராகன் 855, 12ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகிறது லெனோவா z5 ப்ரோ ஜிடி!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 டிசம்பர் 2018 20:30 IST

லெனோவா z5 ப்ரோ ஜிடி ஸ்மார்ட்போனானது நேற்று அறிமுகமானது. இந்த போன் உலகின் முதல் குவால்காம் 855 கொண்டு வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 12ஜிபி ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது சந்தையில் இதுவே முதல்முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை கொண்டு இயங்குகிறது. இந்த போன் நாட்ச் டிஸ்பிளே கொண்டிருக்கவில்லை.

லெனோவா Z5 ப்ரோ ஜிடி விலை,

லெனோவா Z5 ப்ரோ ஜிடி 6ஜிபி ரேம்/ 128ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலையானது CNY 2,698 (தோராயமாக ரூ.27,700) ஆகும். 8ஜிபி ரேம்/ 128ஜிபி நினைவகம் கொண்ட மாடலுக்கு CNY 2,698 (தோராயமாக ரூ.30,800) ஆகும். 8ஜிபி ரேம்/ 256ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலையானது CNY 3,398 (தோராயமாக ரூ.41,100) ஆகும். இதன் உட்சபட்ச மாடலான 12ஜிபி ரேம்/ 512ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 4,398 (தோராயமாக ரூ.45,100) ஆகும்.

சீனாவில் வரும் ஜனவரி 15 முதல் லெனோவா Z5 ப்ரோ ஜிடி விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது, காரபன் பிளாக் கலர் மற்றும் கார்பன் பைபர் பினிஷ் டாப் கொண்டுள்ளது. உலக முழுவதும் இந்த மொபைல் எப்போது வெளியாகிறது என்பது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

லெனோவா Z5 ப்ரோ ஜிடி சிறப்பம்சங்கள்,

டூயல் சிம் கொண்ட லெனோவா Z5 ப்ரோ ஜிடி zui 10.0 ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது இதில் 6.39 இன்ச் புல் எச்.டி + (1080x2340 பிக்செல்ஸ்) சூப்பர் அமொல்ட் டிஸ்பிளே உடன் 19.5:9 அக்ஸசப்பட் ரேஸியோ கொண்டுள்ளது. இதில் கார்னரிங் கொரில்லா கிளாஸ்சும் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855, லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்ட்போனானது, 6ஜிபி, 8 ஜிபி, மற்றும் 12ஜிபி ரேம் வகைகளில் கிடைக்கிறது. இந்த போனில் பின்பக்கம் டூயல் கேமரா, 16 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் f/1.8 அப்பர்ச்சர் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் உடன் 24 மெகா பிக்ஸெல்ஸ் சோனி சென்சார் உடன் f/1.8 அப்பர்ச்சர் உடன் கிடைக்கிறது.

Advertisement

லெனோவா Z5 ப்ரோ ஜிடி ஸ்மார்டபோனின் முன்பக்கமும் டூயல் கேமரா கொண்டுள்ளது. ஒன்று 16 மெகா பிக்ஸெல்ஸ் f/2.2 மற்றும் 8 மெகா பிக்செல்ஸ் ஐஆர் சென்சார் மற்றும் பேஸ்அன்லாக் உடன் வருகிறது.

 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 24-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3350mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lenovo Z5 Pro GT price, Lenovo Z5 Pro GT specifications, Lenovo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Game of Thrones ஃபேன்ஸ், ஏத்துங்க! Realme 15 Pro 5G GOT Edition Rs. 41,999ல வந்திருக்கு
  2. WhatsApp Status Questions அம்சம்: Android Beta-வில் வெளியீடு
  3. விறுவிறுப்பான Display அனுபவத்துடன் வருகிறது Lava Shark 2. 120Hz refresh rate, 50MP camera
  4. iQOO ரசிகர்களுக்கு விருந்து! Pad 5e, Watch GT 2, TWS 5 வெளியீடு: தேதி மற்றும் Key Specs இங்கே!
  5. மோட்டோரோலா Android 16 வந்திருக்கு! Edge 60 Pro, Fusion முதல்ல அப்டேட், Notification Grouping, Instant Hotspot
  6. Lava Shark 2 வருது! பிளாக், சில்வர் கலர்ஸ், 50MP AI கேமரா உடன் கிளாஸி லுக்
  7. சாம்சங் Galaxy F36, M36-க்கு One UI 8 அப்டேட்! Android 16-ஓட வந்திருக்கு, இப்பவே செக் பண்ணுங்க
  8. Samsung ஃபோன் வாங்க சரியான நேரம்! Galaxy S24 FE உட்பட பிரீமியம் மாடல்களில் Rs. 28,000 வரை சேமிக்க வாய்ப்பு
  9. கட்டிங் எட்ஜ் All-in-One PC மாடல்களில் Rs. 24,990-லிருந்து ஆரம்பிக்கும் அதிரடி சலுகைகள்! HP, ASUS, Lenovo மாடல்களை குறைந்த விலையில்
  10. Smartwatch வாங்க சரியான நேரம்! Fossil, Amazfit, Titan வாட்ச்களில் Rs. 16,000 வரை தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.