அடுத்த தலைமுறை 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் அமெரிக்காவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் லெனோவா நிறுவனம் 5ஜி நெட்வொர்க் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக, அதன் தலைவர் அறிவித்துள்ளார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஸ்னாப்டிராகனின் புதிய பிராசஸரான 855 எஸ்.ஓ.சியை கொண்டதாக அந்த மொபைல் இருக்கும் என்று கூறினார். அப்படியானால், 5ஜி நெட்வொர்க்கும், 855 பிராசஸரும் கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்ய இருக்கிறது லெனோவா.
ஆனால், இந்த ஸ்மார்ட்ஃபோன் என்று வெளியிடப்படும் என்று அவர் அறிவிக்கவில்லை. தகவல்களின் படி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம்.
லெனோவோ தவிர, ஹுவாய், ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் 5 ஜி மொபைலைய தயாரிப்பதாக அறிவித்துள்ளன. விவோ, ஹுவாய், ஒப்போ, ஒன் பிளஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்