இதுவரை ஸ்மார்ட்போன் அனுபவத்தை பெறாதவர்களுக்காக லாவா நிறுவனம் சார்பாக தற்போது லாவா Z40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ திட்டத்தின் பயனாளியான லாவா நிறுவனம், இந்தப் புதிய தயாரிப்பை அண்ட்ராய்டு 8.1(கோ எடிஷன்) கொண்டு வெளியாகுகிறது.
4 இஞ்ச் திரை, 8 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமராவுடன் வெளியாகிறது இந்த போன். அரைநாள் வரை இந்த போனின் பேட்டரி பவருடன் இருக்கும் என நிறுவனம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 10 இந்திய மொழிகளில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கே7 ஸ்பீக்கரால் பெற்றிருக்கும்.
இந்தியாவில் லாவா Z40 ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் இந்தத் தயாரிப்பு, ரூ.3,499க்கு விற்பனை செய்யப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் கோல்டன் நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தியாவில் லாவா Z40 ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:
இரண்டு சிம் ஸ்லாட்கள், அண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருளைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச திரையைக் கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. 2 மெகா பிக்சல் பின்புற கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் வெளியாகவுள்ள நிலையில் போக்கே மோடையும் இந்த போனில் பயன்படுத்த முடியும்.
பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2,250mAh பவரை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போன் அறிமுகத்தின் மூலம் லாவா தனது பிராண்டை முதல்முறையாக ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்திகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்