Photo Credit: Lava
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Lava Yuva 4 செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Lava Yuva 4 செல்போன் யூனிசாக் டி606 சிப்செட்டுடன் நவம்பர் 28 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 230,000க்கும் அதிகமான AnTuTu புள்ளிகளை பெற்றதாக கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர், 5,000mAh பேட்டரி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இரண்டு மெமரி ஆப்ஷன்கலில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட லாவா யுவா 3 செல்போன் மாடலுக்கு அடுத்தபடியாக Lava Yuva 4 வெளியாகிறது.
இந்தியாவில் Lava Yuva 4 ஆரம்ப விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் 6,999 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,499 என்கிற விலைக்கு கிடைக்கிறது. இது மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. பளபளப்பான கருப்பு, பளபளப்பான ஊதா மற்றும் பளபளப்பான வெள்ளை நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. தற்போது ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. நேர்மறையான விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. Lava Yuva 4 ஆனது ஒரு வருட உத்தரவாதத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.
Lava Yuva 4 ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.56-இன்ச் HD+ திரையைக் கொண்டுள்ளது. இந்த செல்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான மெமரியை கொண்டுள்ளது. Unisoc T606 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.
கேமரா பொறுத்தவரையில் இது 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற சென்சார் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் பக்க சென்சார் கேமராவை பெறுகிறது. முன் கேமரா முன் பேனலின் மேற்புறத்தில் மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஸ்லாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Lava Yuva 4 ஆனது 10W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் "பளபளப்பான பின்புற வடிவமைப்பு" கொண்டதாக இருக்கும் கூறப்படுகிறது. இதனை Lava நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்