வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல SONY கேமரா யாரு தருவா? Lava Blaze X 5G தருதே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 13:28 IST
ஹைலைட்ஸ்
  • 6.67-இன்ச் FHD+ 3D Curved AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
  • 5,000mAh பேட்டரி மற்றும் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது
  • Lava Blaze X 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வளைந்த AMOLED டிஸ்ப்ளே

Photo Credit: Lava

Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G  இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G  இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G  இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் Lava Blaze X 5G விலை

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி 14,999 ரூபாய் 
6ஜிபி ரேம் +128ஜிபி மெமரி 15,999  ரூபாய் 

8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி  16,999 ரூபாய் 

இது ஸ்டார்லைட் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது. அறிமுகச் சலுகையாக, லாவா நிறுவனம் அனைத்து மாடல்களிலும் 1,000 ரூபாய் தள்ளுபடி தருகிறது. 

Lava Blaze X 5G அம்சங்கள் 

டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயங்குகிறது. 6.67-இன்ச் முழு-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதம், 394ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 800nits உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரி இருக்கிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் போனில் கிடைக்கிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 

Lava Blaze X 5G மாடலில் 64 மெகாபிக்சல் கேமரா, சோனி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிங் செய்ய ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.ப்ளூடூத், Wi-Fi, GPS, OTG, 5G மற்றும் USB Type-C போர்ட் இணைப்பு வசதிகள் இருக்கிறது. IP52 மதிப்பீட்டுடன் வருகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது.

பேட்டரி திறன் 5,000mAh ஆக உள்ளது. Li-Polymer பேட்டரி 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. ஆட்டோ-கால் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்கள்  போன்ற வசதிகளும் இருக்கிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Lava Blaze X 5G, Lava, Lava Yuva 5G, Lava Yuva, Lava Blaze

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.