Photo Credit: Lava
Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.
Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. Lava Blaze X 5G விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி 14,999 ரூபாய்
6ஜிபி ரேம் +128ஜிபி மெமரி 15,999 ரூபாய்
8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி 16,999 ரூபாய்
இது ஸ்டார்லைட் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது. அறிமுகச் சலுகையாக, லாவா நிறுவனம் அனைத்து மாடல்களிலும் 1,000 ரூபாய் தள்ளுபடி தருகிறது.
டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயங்குகிறது. 6.67-இன்ச் முழு-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதம், 394ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 800nits உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரி இருக்கிறது. விர்ச்சுவல் ரேம் அம்சம் போனில் கிடைக்கிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
Lava Blaze X 5G மாடலில் 64 மெகாபிக்சல் கேமரா, சோனி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிங் செய்ய ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.ப்ளூடூத், Wi-Fi, GPS, OTG, 5G மற்றும் USB Type-C போர்ட் இணைப்பு வசதிகள் இருக்கிறது. IP52 மதிப்பீட்டுடன் வருகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளது.
பேட்டரி திறன் 5,000mAh ஆக உள்ளது. Li-Polymer பேட்டரி 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. ஆட்டோ-கால் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்கள் போன்ற வசதிகளும் இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்