இருப்பதிலேயே கம்மி விலைக்கு இந்த மொபைல் வேண்டுமா?

இருப்பதிலேயே கம்மி விலைக்கு இந்த மொபைல் வேண்டுமா?

Photo Credit: iQOO

iQOO Neo 9 Pro was launched in India in Februar

ஹைலைட்ஸ்
  • iQOO ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலைக்கு வருகிறது
  • வங்கிசலுகையுடன் இன்னும் குறைந்த விலைக்கு வரும்
  • No cost EMI ஆப்ஷன் மூலமும் இந்த செல்போன் வாங்கலாம்
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iQOO Z9s Pro 5G, iQOO Neo 9 Pro, iQOO 12 5G செல்போன் பற்றி தான்.


iQOO Z9s Pro 5G, iQOO Neo 9 Pro, iQOO 12 5G மொபைல் போன்களை Amazon Great Indian Festival 2024 சலுகையில் வாங்கலாம். இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் செப்டம்பர் 27 அன்று விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் பயனர்கள் செப்டம்பர் 26 முதல் முன்கூட்டியே Amazon Great Indian Festival சலுகையை பெறலாம். iQOO Z9x 5G , Z9 Lite 5G, Z9s Pro 5G, Neo 9 Pro மற்றும் iQOO 12 5G உள்ளிட்ட iQOO செல்போன்கள் விற்பனை இந்த காலத்தில் கணிசமாக குறைந்த விலையில் கிடைக்கும். வங்கி சலுகைகள் உட்பட அனைத்தும் சலுகைகளும் சேர்ந்து செல்போன்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும்.


உதாரணமாக, SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை இன்னும் சில செல்போன் மாடல்களுக்கு பெறலாம். iQOO Z9 Lite , iQOO Z9 5G மற்றும் iQOO Z7 Pro செல்போன்களுக்குக்கான சலுகை பற்றி Amazon தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
iQOO Z9 Lite 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 10,499 என்கிற விலையில் இருந்தது. Amazon Great Indian Festival 2024 விற்பனையின் போது ரூ. 9,499 விலைக்கு கிடைக்கும், iQOO Z9x செல்போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 10,749 என்கிற விலைக்கு கிடைக்கும். இதன் அதிகாரப்பூர்வ விலை ரூ. 12,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


iQOO Z9s 5G மற்றும் Z9s Pro 5G ஆகியவை வரவிருக்கும் அமேசான் விற்பனையின் போது ஆறு மாதங்கள் வரை No cost EMI மூலம் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. iQOO Z9s 8GB ரேம் + 128GB மெமரி மாடல் மிக குறைந்த விலையான ரூ. 17,499 என்கிற விலையில் வாங்கலாம். இதன் உண்மை விலை ரூ 19,999 ஆகும். மறுபுறம், iQOO Z9s Pro செல்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபிமெமரி மாடல் ரூ.21,999 விலைக்கு கிடைக்கும். அதன் வெளியீட்டு விலையில் இருந்து 3,000 . ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ. 1,500 சலுகையும் கிடைக்கும்.


iQOO Neo 9 Pro Amazon Great Indian Festival 2024 விற்பனையின் போது ரூ. 31,999 என்கிற விலையில் ஆறு மாதங்கள் வரையிலான No cost EMI மூலம் வழங்கப்படும். இதன் உண்மையான விலை ரூ. 35,9991 ஆகும். கூடுதலாக ரூ.2,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். iQOO 12 5G 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ 47,999 விலைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ.52,999 ஆகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQOO Z9x 5G, iQOO Z9 Lite 5G, iQOO Z9s Pro 5G
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »