iQoo Neo 3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது.
Photo Credit: Weibo
iQoo Neo ஸ்மார்ட்போனில் iQoo Neo 3 வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது
iQoo-யின் புதிய போனான iQoo Neo 3 விரைவில் சீனாவிற்கு வரவுள்ளது. iQoo-ன் தயாரிப்பு பொது மேலாளர் சுஜி நியாவ் ஷூ (Shuji Niao Shu) வெய்போவில் வரவிருக்கும் iQoo போனில் புதிய 3 + 2 யுக்தியை நிறுவனம் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் iQoo போன் ஒரு புதிய ‘3 + 2' உச்ச தொகுப்பு யுக்தியை, டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் அனைத்து விவரங்களையும் குறிக்க அதை டிகோட் செய்ததாகக் கூறுகிறது. அதில், ‘3' என்பது ஸ்னாப்டிராகன் 865 SoC, 120Hz டிஸ்பிளே புதுப்பிப்பு வீதம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜைக் குறிக்கிறது என்று டிப்ஸ்டர் குறிப்பிடுகிறது. இந்த சொற்றொடரில் உள்ள ‘2' 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் குறிக்கிறது.
எனவே, டிப்ஸ்டரின் கூற்றுப்படி, iQoo Neo 3 முதன்மை தர விவரக்குறிப்புகளை வழங்கும். கேமிங் தொடர்பான அம்சங்களை அதன் வரவிருக்கும் நியோ-சீரிஸ் போனிலும் கொண்டுவரும். டிப்ஸ்டர் வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இது தவிர, iQoo Neo 3, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வெய்போ பயனர் - நியூட்ரென் டெக்னாலஜி - iQoo Neo 3-ஐ ஏப்ரல் 23 அன்று iQoo வெளியிடும் என்று கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Photon Microchip Breakthrough Hints at Quantum Computers With Millions of Qubits
NASA Spots Starquakes in a Red Giant Orbiting One of the Galaxy’s Quietest Black Holes
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks