iQoo Neo 3, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்பதை படம் காட்டுகிறது.
Photo Credit: Weibo
புதிய படம் Vivo iQoo Neo 3-யின் பின்புற கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது
விரைவில் வரவிருக்கும் iQoo Neo 3 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரெண்டரை விவோ வெளியிட்டுள்ளது. ஒரு iQoo நிர்வாகி போனின் பின்புறத்தைக் காட்டும் புகைப்படத்தை வெய்போவில் வெளியிட்டுள்ளார். போனின் முன் பேனல், வெய்போ கணக்கில் iQoo பகிர்ந்த வீடியோவிலும் தெரிந்தது.
iQoo Neo 3, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்பதை படம் காட்டுகிறது. இது, மேல்-இடது மூலையில் செவ்வக கேமரா தொகுதிடன் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இந்த போன், 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவைக் கொண்டுவரும் என்று யூகிக்கப்படுகிறது. வால்யூம் ராக்கர்கள் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தின் கீழ்-இடது பகுதியில் 5 ஜி குறிப்புடன் பிராண்ட் லோகோவும் உள்ளது. GSMArena-வின் அறிக்கை, V1981A மாதிரி எண்ணைக் கொண்ட ஒரு விவோ போன் சிசிசி-யில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Photo Credit: Weibo
வெய்போவில் iQoo வெளியிட்ட வீடியோவில், மீடியா பிளேயருடன் திறந்திருக்கும் போனை படம் காட்டுகிறது. பேனலின் வலது மேல் மூலையில் ஒரு ஹோல்-பஞ்சில், செல்ஃபி கேமராவை வைத்திருக்கும் என்று முந்தைய படம் காட்டியது. இந்த போனில் 144Hz புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளே பேனல் இருக்கும். இது யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் வரும். இது 5G-ஐ ஆதரிக்கும். இந்த போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Elon Musk’s xAI Releases Grok 4.1 AI Model, Rolled Out to All Users
The Game Awards 2025 Nominees Announced: Clair Obscur: Expedition 33 Leads With 12 Nominations